கைநுட்பச் சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைநுட்பச் சிகிச்சை
இயன்முறை மருத்துவரால் கைநுட்பச் சிகிச்சை வழங்கப்படுதல்

கைநுட்பச் சிகிச்சை (ஆங்கிலம்:Manual Therapy அல்லது Manipulative therapy) என்பது இயன்முறைமருத்துவர்களால் கையாளப்படும் இயன்முறைமருத்து சிகிச்சை பிரிவு ஆகும். மேலும் இது பொதுவாக எலும்பு மற்றும் சதை சார்ந்த உடல் உபாதை, வலி மற்றும் உடல் குறைபாடுகளுக்கு தீர்வாக அமைகிறது. இம்முறை எலும்பு, சதை மற்றும் மூட்டு பகுதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக உள்ளது.[1][2]

2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆராய்ச்சி மற்றும் இலக்கிய கட்டுரைகள் கைநுட்பச் சிகிச்சை எலும்பு மற்றும் சதை துறை சார்ந்த உடல் பலகீனங்களில் ஏற்படும் வலிகளுக்கு ஏற்ற சிகிச்சை முறை என வழிகோலியது.[3]

விளக்கங்கள்[தொகு]

இர்வீன் கூர், ஜெ.எஸ்.டென்ஸ்லோ மற்றும் அவரது குழுவினர் மனித உடலின் மேல் கைநுட்பச் சிகிச்சை சேய்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.[4] கூர் அவர்கள் கைநுட்பச் சிகிச்சை என்பது உடலுக்கு கைகளினால் சரியான உறுதி படுத்தப்பட்ட மற்றும் தனித்துவமான குறிப்பிட்ட திசையில் வழங்கப்படும் விசை ஆகும் என கூறுகிறார். மேலும் இது எலும்பு மற்றும் தசை துறை சார்ந்த உடல் குறைபாடுகளான அசாதாரண மூட்டு அசைவு, சதை பிடிப்பு மற்றும் அதன் இணைப்பு திசுக்கள் சார்ந்த குறைபாடுகளை சரி செய்கிறது என விளக்குகிறார்.[5]

எலும்பியல் கூற்றின் படி கைநுட்பச் சிகிச்சை என்பது தனித்துவமான முறையில் கைகளினால் நுட்பமான முறையில் வழங்கும் ஒரு சிகிச்சை முறை ஆகும். இது இயன்முறைமருத்துவர்களால் தசைகள், மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்களில் ஏற்படும் நோயை கண்டறிதல் மற்றும் குணப்படுத்துதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வலிகளை குறைக்க, மூட்டு அசைவுகளை சரி செய்ய அதற்கு காரணமான தசை மற்றும் இணைப்பு திசுக்களின் இறுக்கம், நீட்சிகளை சரி செய்கிறது. மேலும் உடல் வலுவுடன் இருக்கவும், சிறப்பாக இயங்கவும், நிலையாக இருக்கவும் பயன்படுகிறது.[6][7]

பயன்பாடு[தொகு]

மேற்கு ஐரோப்பாவின் நாடுகள், வட அமெரிக்காவின் நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் பொதுவாக கைநுட்பச் சிகிச்சை பல்வேறு மருத்துவ துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள், நிபுணரகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது..[1] மேலும் மருத்துவ துறையில் அல்லாதவர்கள் சிலர் கைநுட்பச் சிகிச்சை வகைகளைகளில் சில நுட்பங்களை வழங்குகின்றனர்.

2004 ஆம் ஆண்டு மே மாதம் கைநுட்பச் சிகிச்சை பற்றிய விவரம் சேகரிப்பு நடந்தது.[8] 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வழங்கப்பட ஐந்தாவது பொதுவானது சிகிச்சை கைநுட்பச் சிகிச்சை ஆகும்.[9]

நுட்பங்கள்[தொகு]

 • தசைதிசுப்படலச் சிகிச்சை என்பது தசை மற்றும் திசுப்படலம் சார்ந்த குறைபாடுகளுக்கு வழங்கப்படும் கைநுட்பச் சிகிச்சை வகை ஆகும். இது தசைதிசுவின் இலகுத்தன்மை, இயக்கம், பிடிப்பு, தழும்பு மற்றும் இறுக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.[10][11]
 • உடற்பிடிப்பு செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மேலும் வீக்கத்தை குறைக்கும்.[12][13]
 • மென்திசுச் சிகிச்சை என்பது நிலையான, நேரடி அழுத்தத்தை தசை பிடிப்பு உள்ள பகுதிக்கு கொடுப்பது ஆகும்.[14]
 • தசைதிசுப்படலம் தூண்டுதல் சிகிச்சை என்பது தசைதிசுப்படலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியை குறைக்க உதவுகிறது.[11][15][16]
 • தசை நீட்சி என்பது உடலில் உள்ள பெரும் தசைகளை நீட்டித்து செய்யும் முறையாகும். இதனால் மூட்டு அசைவு மேம்படும், தசை இறுக்கம், அதனால் உண்டான வலிகள் மற்றும் பிடிப்பு குறையும். பெரும்பாலும் விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.[17][18][18][19][20]
 • பசைப்பட்டைச் சிகிச்சை என்பது உடலில் ஒட்டும் தசைப்பட்டை மூலம் வழங்கும் சிகிச்சை ஆகும். இதனால் தசையில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் நிணநீர் இயக்க குறைபாடுகளை சரி செய்யப்படுகிறது. இன்றளவும் மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.[21][22][23]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Manual therapy for osteoarthritis of the hip or knee - a systematic review". Manual Therapy 16 (2): 109–17. 2010. doi:10.1016/j.math.2010.10.011. பப்மெட்:21146444. 
 2. "Soft Tissue Sports Massage". The Treatment Table. The Treatment Table. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
 3. "Placebo response to manual therapy: something out of nothing?". J Man Manip Ther 19 (1): 11–9. 2011. doi:10.1179/2042618610Y.0000000001. பப்மெட்:22294849. பப்மெட் சென்ட்ரல்:3172952. https://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=22294849. 
 4. "Facilitated Segments: a critical review". cpdo.net. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
 5. I.M. Korr (6 December 2012). The Neurobiologic Mechanisms in Manipulative Therapy. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-8902-6.
 6. "Orthopaedic Manual Physical Therapy Description of Advanced Specialty Practice" (PDF). aaompt.org. American Academy of Orthopaedic Manual Physical Therapists. Archived from the original (PDF) on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Development of chiropractic nomenclature through consensus". Journal of Manipulative and Physiological Therapeutics 17 (5): 302–309. 1994. 
 8. "More Than One-Third of U.S. Adults Use Complementary and Alternative Medicine, According to New Government Survey". National Center for Complementary and Integrative Health. National Institute for Health. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
 9. "10 Most Common CAM Therapies Among Adults - 2007". nccih.nih.gov. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. cite web|last1=Paul van den Dolder, Paulo Ferreira, and Kathryn Refshauge|title=Is soft tissue massage an effective treatment for mechanical shoulder pain? A study protocol|pmc=3103116|website=National Institutes of Health|publisher=US National Library of Medicine
 11. 11.0 11.1 Ingraham, Paul. "Does Fascia Matter?". painscience.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
 12. Ingraham, Paul. "Massage does not reduce inflammation and promote mitochondria". painscience.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
 13. Brosseau, Lucie; Casimiro, Lynn; Milne, Sarah; Welch, Vivian; Shea, Beverley; Tugwell, Peter; Wells, George A (21 October 2002), Brosseau, Lucie (ed.), Deep transverse friction massage for treating tendinitis, Chichester, UK: John Wiley & Sons, Ltd, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14651858.cd003528
 14. "Muscle energy technique for non-specific low-back pain". Cochrane Database of Systematic Reviews. doi:10.1002/14651858.CD009852.pub2. http://cochranelibrary-wiley.com/doi/10.1002/14651858.CD009852.pub2/full. 
 15. "Reliability of physical examination for diagnosis of myofascial trigger points: a systematic review of the literature.". Clin J Pain 25 (1): 80–9. 2009. doi:10.1097/AJP.0b013e31817e13b6. பப்மெட்:19158550. https://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=19158550. 
 16. "A systematic, critical review of manual palpation for identifying myofascial trigger points: evidence and clinical significance.". Arch Phys Med Rehabil 89 (6): 1169–76. 2008. doi:10.1016/j.apmr.2007.12.033. பப்மெட்:18503816. https://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=18503816. 
 17. "Stretching to prevent or reduce muscle soreness after exercise". Cochrane Database Syst Rev (7): CD004577. 2011. doi:10.1002/14651858.CD004577.pub3. பப்மெட்:21735398. 
 18. 18.0 18.1 "Acute effects of muscle stretching on physical performance, range of motion, and injury incidence in healthy active individuals: a systematic review". Appl Physiol Nutr Metab 41 (1): 1–11. 2016. doi:10.1139/apnm-2015-0235. பப்மெட்:26642915. 
 19. Page P (2012). "Current concepts in muscle stretching for exercise and rehabilitation". International Journal of Sports Physical Therapy 7: 109–19. பப்மெட்:22319684. 
 20. "Stretching is not a warm up! Find out why".
 21. Novella, Steven (25 July 2012). "Olympic Pseudoscience". Sciencebasedmedicine.org. Science-Based Medicine. Archived from the original on 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
 22. Jones, Clay (9 March 2018). "A Miscellany of Medical Malarkey Episode 3: The Revengening". ScienceBasedMedicine.org. Science-Based Medicine. Archived from the original on 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018.
 23. "Kinesio Tape for Athletes: A Big Help, or Hype?". WebMD.com. Web MD. Archived from the original on 13 March 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைநுட்பச்_சிகிச்சை&oldid=3586749" இலிருந்து மீள்விக்கப்பட்டது