உள்ளடக்கத்துக்குச் செல்

கைட்ரோபைலக்சு கிராசிலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைட்ரோபைலக்சு கிராசிலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இரணிடே
பேரினம்:
கைட்ரோபைலக்சு

பிட்கெஞ்சர், 1843
இனம்:
கை. கிராசிலிசு
இருசொற் பெயரீடு
கைட்ரோபைலக்சு கிராசிலிசு
கிராவன்ஹார்சுட், 1829)
வேறு பெயர்கள் [2]
  • இராணா கிராசிலிசு கிராவன்ஹார்சுட், 1829
  • லிம்னோடைடிசு மேகுலேரிசு பிளைத், 1855 "1854"
  • கையோரானா மேகுலேரியா — குந்தர், 1864
  • இரானா மேகுலேரியா — புவுலெஞ்சர், 1882
  • கையோரானா கிராசிலிசு — சென் உள்ளிட்டோர், 2005
  • சில்விரானா கிராசிலிசு — புரோசுட் உள்ளிட்டோர், 2006

கைட்ரோபைலக்சு கிராசிலிசு (Hydrophylax gracilis), கிரேவன்கார்சுடின் தவளை, கிரேவன்கார்சுடின் தங்கத் தவளை, இலங்கை மரத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இது இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளைச் சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் இரானா, சில்விரானா, கைலரானா, கைலோரானா, லிம்னோடைட்சு உள்ளிட்ட பல்வேறு பேரினங்களின் கீழ் வைக்கப்பட்டது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[3]

வாழிடம்

[தொகு]

கைட்ரோபைலக்சு கிராசிலிசு சதுப்பு நிலங்கள், விவசாய நிலம், புல்வெளிகள், புதர் காடுகளில் சுமார் 600 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் காணப்படுகிறது. முதிர்ந்த தவளைகள் பகுதி-ஆர்போரியல், பகுதி-நீர்வாழ் உயிரினமாகும். அதேசமயம் இவற்றின் தலைப்பிரட்டைகள் தேங்கி நிற்கும் நீரில் வாழ்கின்றன. கை. கிராசிலிசு என்பது ஒரு பொதுவான சிற்றினமாகும், இது ஈரநில மீட்பு, நகரமயமாக்கல், நீர்வாழ் வேளாண் இரசாயன மாசுபாடு மூலம் அதன் ஈரநில வாழ்விடங்களை இழப்பதால் அச்சுறுத்தப்படுகின்றன. இது பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Manamendra-Arachchi, K.; de Silva, A.; Wickramasinghe, D. (2016). "Hydrophylax gracilis". IUCN Red List of Threatened Species 2004.
  2. Frost, Darrel R. (2020). "Hydrophylax gracilis (Gravenhorst, 1829)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 15 January 2020.
  3. https://amphibiansoftheworld.amnh.org/Amphibia/Anura/Ranidae/Hylarana/Hylarana-gracilis