கைசத் கசுடட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைசத் கசுடட் (Kaizad Gustad 1968) என்பவர் மும்பையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

பார்சி செல்வக் குடும்பத்தில், மும்பையில் பிறந்த கைசத் கசுடட்  ஆமதாபாத்தில் வளர்ந்தார். அவருடைய தாத்தா நடத்தி வந்த அரங்கில் திரைப்பட ஓட்டுநராக வேலை செய்து பயிற்சி பெற்றார். சிட்னி மற்றும் பல உலக நாடுகளுக்கு 18 அகவையாக இருக்கும் போது பயணம் செய்தார். நியூயார்க்கு பல்கலைக் கழக திரைப் பள்ளியில் பணியாற்றினார்.[2]

பாம்பே பாய்ஸ்,  பூம்,  போம்ப்ளி அண்ட் பீட்ரிஸ்  ஆகிய படங்களை இயக்கினார். கைசத் கசுடட் இது வரை மூன்று புதினங்கள் எழுதியுள்ளார். அவை ஆப் நோ பிக்சட் அட்ரஸ், தி ரோட் டு மேண்டலே, 7 ஸ்டோரிஸ் ஆகும்.

டயானா ஏடன் என்ற உலக அழகியுடன் பழகினார். அலெக்ஸான்ட்ரா ரிட்  என்ற அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைசத்_கசுடட்&oldid=2704618" இருந்து மீள்விக்கப்பட்டது