கைக்குத்தல் அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைக்குத்தல் அரிசி என்பது மர உரல் அல்லது கல்லுரலில் மர உலக்கையால் குத்தி புடைத்து எடுக்கப்படும் அரிசி வகை ஆகும். இந்த கைக்குத்தல் அரிசியானது நெல் அரவை இயந்திரங்களால் அரைத்து எடுக்கப்படாமல், கைகளால் குத்தப்பட்டு தயாரிப்பதாகும்.[1] இந்த கைக்குத்தல் அரிசியில் நெல்லின் மேலோடான உமி மட்டும் நீக்கப்பட்டு உட்புற அடுக்கான தவிடு நீக்கப்பட்டாமல் இருக்கும். எனவே இது சற்று பழுப்பு நிறத்துடன் காணப்படும் அரிசியாகும். இந்த வழியில், அரிசியில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் அரிசி எண்ணெய் ஆகியவை சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.[2]

ஊட்டச்சத்துகள்[தொகு]

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் ஒன்றாகும்.[3] கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளது. அரிசி பதப்படுத்தப்படும் விதம் அதன் ஊட்டச்சத்து தன்மையை பாதிக்கிறது. கைக்குத்தல் அரிசியில் அதன் உமி மட்டும் அகற்றப்படுவதால் அதன் ஊட்டச்சத்துகள் தக்க வைக்கப்படுகின்றன.[4] இதில் சுமார் 8 சதவீதம் புரதம் மற்றும் சிறிய அளவு கொழுப்புகள் உள்ளன. இதில் தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் உள்ளன.[5]

அரிசி ஆலைகளில் தீட்டப்படும் அரிசிகள் பயன்பாட்டில் உள்ளன. இயந்திரங்களில் தீட்டப்படும் நெல்லில் இருந்து நார்ச்சத்து நிறைந்த உமி நீக்கப்படுவதால் அரிசியில் நார்ச்சத்து நீங்குகிறது. இந்த அரிசி எளிதில் செரித்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அரிசி ஆலைகளில் தீட்டப்பட்ட நெல்லினால் உடலில் அதிக கால்சியம் சேராது. இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.[6]

உமியும் தவிடும்[தொகு]

உமி[தொகு]

கைக்குத்தல் அரிசியின் உமியில் 38 சதவீதம் செல்லுலோஸ் மற்றும் 32 சதவீதம் லிக்னின் அடங்கியுள்ளது.[7] இது ஓர் மாற்று எரிபொருளாகவும் உள்ளது. ஓர் ஆண்டு முழுதும் பெறப்படும் 80 மில்லியன் டன் உமியில் 170 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. அரிசி உமியில் 22 சதவீதம் சாம்பலும், 95 சதவீதம் சிலிக்கா உள்ளது. அதிக அளவு சிலிக்கா உராய்வு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு உமி இந்தியாவில் எரிபொருளாக கொதிகலன்களிலும், வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தவிடு[தொகு]

அரிசி தவிடானது மிகுந்த மதிப்பு வாய்ந்த துணைப் பொருளாகும். அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்த கொழுப்பு நீக்கப்படாத தவிடானது கொழுப்புச் சத்து (15 லிருந்து 20 சதவீதம்), புரதச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் உதவிகரமான வேதிப்பொருட்களை கொண்டது. தவிட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.[8] தவிட்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக கோழி மற்றும் கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும். இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது. கைக்குத்தல் அரிசியில் இருந்து கிடைக்கும் தவிட்டிலிருந்து தவிட்டு ரொட்டி தயாரிக்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Village milling - IRRI Rice Knowledge Bank", www.knowledgebank.irri.org, பார்க்கப்பட்ட நாள் 2023-10-02
  2. https://www.handpoundedrice.com/what-is-hand-pounded-rice
  3. https://www.ulamart.com/blog/ta/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/
  4. https://www.riceassociation.org.uk/types-of-rice
  5. https://www.britannica.com/plant/rice {{citation}}: External link in |website= (help); Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  6. https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/11/22113354/Bran-not-removed-Rice-will-add-strength-to-food.vpf
  7. https://agritech.tnau.ac.in/ta/post_harvest/pht_cereal_rice_by_prodct_imprt_ta.html
  8. https://ta.healthy-food-near-me.com/what-are-bran-and-how-are-they-good-for-health/
  9. https://m.dinamalar.com/detail.php?id=1292790
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்குத்தல்_அரிசி&oldid=3927347" இலிருந்து மீள்விக்கப்பட்டது