கைக்கிளை (சிற்றிலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கைக்கிளை (பாட்டியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கைக்கிளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஒருதலைக் காமம்|ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை என்பது இலக்கணம்[1]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், ஒரு தலைக் காமம் தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.

இலக்கியம்[தொகு]

 • விக்கிமூலம் பகுதியில் காணப்படும் ஐந்து கொச்சகப் பாடல்கள் கைக்கிளை இலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
 • விக்கிமூலம் பகுதியில் காளமேகப் புலவர் பாடியனவாக வரும் ஐந்து கொச்சகப் பாடல்களும் 'கைக்கிளை' சிற்றிலக்கியத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டாகும்.

வகைகள்[தொகு]

 • இது ஐந்து விருத்தங்களைக் கொண்டிருக்கும். [2]
 • 60 வெண்பாக்களாலும் இது அமையும். [3]
 • கைக்கிளை மாலை எனவும் இது கூறப்படும். [4]

குறிப்புகள்[தொகு]

 1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827
 2. ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
  காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)
 3. இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
  பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)
 4. காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]