உள்ளடக்கத்துக்குச் செல்

கைக்காடி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைக்காடி (Kaikadi people) என்பது இந்திய மாநிலங்களான மகாராட்டிரம் மற்றும் கருநாடகம் ஆகிய இடங்களில் காணப்படும் ஒரு சமூகமாகும்.[1][2] இவர்களின் பெயர் கை மற்றும் கூடை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. பாரம்பரியமாக இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். முக்கியமாக மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் அலைந்து திரிந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்போது ஒரே இடத்தில் வசிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் குறிப்பிடத்தக்க இந்திய-ஆரிய கலவையுடன் தமிழுடன் நெருக்கமாக தொடர்புடைய திராவிட மொழியான கைக்காடி மொழியைப் பேசுகிறார்கள்.[3] அவர்கள் பிற தமிழ்ச் சமூகங்களைப் போலவே பெண்களின் பருவமடைதல் செயல்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர்.

வரலாறு

[தொகு]

இவர்கள் குறிப்பிடத்தக்க ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். ஒரு காலத்தில் குற்றவியல் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டனர். எனவே சுதந்திரத்திற்குப் பிறகு சீர்மரபினர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.[4] காலனித்துவ அறிஞர்கள் சமூகத்தின் மீது குறிப்பிடத்தக்க வெறுப்பைக் கொண்டிருந்தனர். இராபர்ட் வேன் ரசல் இவர்களை "அவமதிக்கத்தக்கவர்கள்" என்றும் "மோசமான ஒழுக்கம் கொண்டவர்கள்" என்றும் கருதினார். கூடை தயாரிப்பது இவர்களின் தொழில் என்று ரசல் பதிவு செய்துளார்.[5] காலனித்துவ அறிஞர்கள் இந்த சமூகம் தெலுங்கானாவிலிருந்து வந்ததாகவும், இவர்கள் யாருகலா இனத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகின்றனர்.

இவர்கள் சாதி படிநிலையில் குன்பி சமூகத்திற்கு சற்று மேலே உள்ளார்கள். மேலும் இவர்கள் கிராமக் கோயில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் இடஒதுக்கீட்டு நோக்கங்களுக்காக இவர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்படுகிறார்கள் . இவர்கள், விதர்பாவின் பெரும்பகுதியில், இவர்கள் பட்டியலின சாதிகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.[6] கைகாடி மக்கள் முக்கியமாக நாக பஞ்சமி அன்று நாக வழிபாட்டை தொடர்கிறார்கள். ஆனாலும் கண்டோபா என்ற நாட்டுப்புற தெய்வத்தையும் வணங்குகிறர்கள்.

குலங்கள்.

[தொகு]

இவர்கள் தங்களின் பழங்குடியின எல்லைக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.[7] ஒரே குலத்திற்குள் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அதே போல் ஒரு பிரிவுக்கு வெளியேயும் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. கைக்காடி ஆண்கள் தாய்வழி அத்தை மகளை திருமணம் செய்ய முடியாது. இருப்பினும் தென்னிந்தியாவில் பின்பற்றப்படும் பெரும்பாலான பகுதிகளைப் போலவே தாய்வழி மாமாவின் குழந்தைகளைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singh, Kumar Suresh; Bhanu, B. V.; India, Anthropological Survey of (2004). Maharashtra (Page_1364) (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 1364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-101-3.
  2. Devi, Dr V. Vasanthi (2021-05-03). A Crusade for Social Justice: P.S.Krishnan : Bending Governence Towards The Deprived (in ஆங்கிலம்). South Vision Books. p. 155.
  3. Mhaiske, Vinod M.; Patil, Vinayak K.; Narkhede, S. S. (2016-01-01). Forest Tribology And Anthropology (Page_185) (in ஆங்கிலம்). Scientific Publishers. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86102-08-9.
  4. Rupavath, Ramdas (2022-07-12). Politics of Education in India: A Perspective from Below (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-60114-5. The Kaikadi community was used to be considered as an untouchable and criminal community in some parts of Maharashtra and India. Today, education brought a ray of hope for them to live a dignified life. But at the same time, ...
  5. K.S, Singh (1992). People of India: The scheduled castes (in ஆங்கிலம்) (2nd ed.). India: Anthropological Survey of India. p. 651. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85579-09-2. One derivation of Kaikadi is from the Tamil kai , i.e. hand , and kudi , i.e. basket , as they are considered to be basket - makers . They are dispersed all over the Vidarbha region of ... The clan names are also used as surnames .
  6. Shashi, Shyam Singh; Varma, P. S. (1991). A Socio-history of Ex-criminal Communities OBCs (in ஆங்கிலம்). Sundeep Prakashan. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85067-69-8. Kaikadi community , a denotified tribe , has taken up the cause of their emancipation and welfare . The Bhatkhya Vimukta Jamati Sanghatana ...
  7. Singh, Kumar Suresh; Bhanu, B. V.; India, Anthropological Survey of (2004). Maharashtra (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 1364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-101-3.
  8. People of India. Maharashtra. Singh, K. S., 1935-2006., Mehta, B. V., 1931-, Anthropological Survey of India. [Calcutta]: Anthropological Survey of India. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-100-4. இணையக் கணினி நூலக மைய எண் 58037479.{{cite book}}: CS1 maint: others (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்காடி_மக்கள்&oldid=4015763" இலிருந்து மீள்விக்கப்பட்டது