கைகளற்ற அதிசயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைகளற்ற அதிசயம் (armless wonder) என்பது இரு கைகளற்ற ஒரு மனிதனை, வழக்கமாக வட்டரங்கின் துணைகாட்சியாகக் காட்சிபடுத்தப்படுவதைக் குறிக்கிறது. பொதுவாக (ஆனால் பிரத்தியேகமாக அல்ல) ஒரு பெண்மணி, தனது பாதங்கள் மற்றும் பாத விரல்களைக் கொண்டு பல்வேறு துணிகரமான செயல்களை, எழுதுதல் அல்லது புகைபிடித்தல் போன்றவைகளை செய்து காட்டுவார். அடிக்கடி, அப்பெண்மணி தான் வைத்திருக்கும் வருகையாளர் முகவரி சீட்டில், கூடுதல் கட்டணத்தில், தனது பாதங்கள் மூலம் கையொப்பமிட்டு பார்வையாளர்களுக்குத் தருவார்.

துணைக்காட்சியில் அவரின் பங்கு[தொகு]

கைகளில்லாத அதிசயம், துணைக்காட்சியில் நடிப்பவர்களிலேயே மிக அதிகம் சம்பளம் பெறுகின்ற நபர் ஆவார். ஒரு பெண்மணியின் கணுக்காலை காண்பிப்பது கூட சிக்கல் எனக் கருதப்பட்ட காலத்தில், ஒரு அழகிய பெண்மணி தனது கால்களின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தும் போது, பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்தது.

கலைஞர்கள்[தொகு]

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கைகளில்லாத ஆச்சர்யத்துக்கு எடுத்துக்காட்டு ப்ரான்சிஸ் ஓ கான்னர் மற்றும் மார்த்தா மாரிசு. ஆன்னி லீக் என்பவர் தான் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு எடுத்துக்காட்டு ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகளற்ற_அதிசயம்&oldid=2417097" இலிருந்து மீள்விக்கப்பட்டது