உள்ளடக்கத்துக்குச் செல்

கே லூசாக்கின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே - லூசாக்கின் விதி (Gay-Lussac's law) என்பது 18 ஆம் ஆண்டின் இறுதியிலும், 19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்திலும் பிரான்சு நாட்டு வேதியியலாளர் சோசப் லூயிசு கே-லூசாக்கால் (1778–1850) மற்றும் பல வேதியியலாளர்களால் கண்டறியப்பட்ட வாயுக்களில் வெப்ப விரிவு மற்றும் அவற்றின் வெப்பநிலை, கன அளவு மற்றும் அழுத்தம் இவற்றுக்கிடையோன தொடர்புகள் குறித்த பல கண்டுபிடிப்புகளைக் குறிக்கும்.

1808 ஆம் ஆண்டில் கே லூசாக் நிறுவிய வாயுக்களின் அழுத்த விதிக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அந்த விதியானது பின் வருமாறமையும்: ”ஒரு மூடப்பட்ட கொள்கலனில் உள்ள வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலையுடன் நேர் விகிதத் தொடர்பினைக் கொண்டிருக்கும்”[1]

முதன்முதலில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள, மாறாத கன அளவுள்ள வாயுவின் அழுத்தத்திற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பை நிறுவுவதற்கு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நிறுவலைத் தந்தமைக்காக, மிகச் சரியான முறையில் கே லூசாக் மதிக்கப்படுவதாக நவீன காலத்திய அறிஞர்கள் கூறுகிறார்கள்.[2][3][4] இந்த விதிகள் முறையே அழுத்த விதி அல்லது அமான்டன் விதி மற்றும் டால்ட்டனின் விதி என வெவ்வேறு விதமாக அழைக்கப்பட்டன.[5]

கன அளவுகளின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதி

[தொகு]
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 3 மீ3 கன அளவுள்ள ஐதரசனானது 1 மீ3 கன அளவுள்ள நைட்ரசனுடன் வினைபட்டு 2 மீ3 கன அளவுள்ள அம்மோனியா வாயுவைத் தருகிறது.

கன அளவின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதியானது, ”வாயுக்கள் ஒன்றொடொன்று வினைபுரிந்து வாயுக்களையே விளைபொருளாகத் தரும் வினையில், எல்லா கன அளவுகளும் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளக்கப்படுமேயானால், ”வினைபடு வாயுக்களின் கன அளவுகள் மற்றும் வினை விளை பொருட்களின் கன அளவுகள் இவற்றுக்கிடையேயான விகிதமானது எளிய முழு எண்கள் வடிவத்திலேயே இருக்கும்”. உதாரணமாக, 2 பங்கு கன அளவுள்ள ஐதரசனானது 1 பங்கு கன அளவுள்ள ஆக்சிசனுடன் வினைபுரிந்து 2 பங்கு கன அளவுள்ள வாயு நிலை நீரைக் கொடுக்கும் என்பதை கே லுாசாக் கண்டறிந்தார்.

கே லூசாக்கின் முடிவுகளின் அடிப்படையில், ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சம கன அளவுள்ள வாயுக்கள் சம எண்ணிக்கையிலான மூலக்கூறுகளையே கொண்டிருக்கும் என்ற கருத்தினை உடைய அவகாதரோவின் விதியை அமேடியோ அவகாதரோ வெளியிட்டார். அவகாதரோவின் இந்தக் கருதுகோள் முன்னதாகக் கூறப்பட்ட முடிவிற்கு இவ்வாறு பொருள் தருகிறது:

2 பங்கு கன அளவுடைய ஐதரசன் + 1 பங்கு கன அளவுடைய ஆக்சிசன் = 2 பங்கு கன அளவுடைய வாயு நிலை நீர்

இது பின்வருமாறும் கருதப்படலாம்.

2 மூலக்கூறுகள் ஐதரசன் + 1 மூலக்கூறு ஆக்சிசன் = 2 மூலக்கூறுகள் நீர்.

1808 ஆம் ஆண்டில் சோசப் லூயிசு கே லூசாக் வாயுக்களின் கூடுகை விதியை உலகிற்கு அறிவித்தார்.[6][7] இருப்பினும், 1860 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சர்வதேச வேதியியல் மாநாட்டில் இத்தாலிய வேதியியலாளர் இஸ்டனிசுலா கன்னிசாரோவினால் திருப்திகரமாக விளக்கப்படும் வரை அவகாதரோவின் கற்பிதக் கொள்கையானது மற்ற வேதியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே இருந்தது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Joseph Louis Gay-Lussac", Columbia Electronic Encyclopedia (6th Edition, Q2 ed.), 2016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787650155
  2. Palmer, WP (1991), "Philately, Science Teaching and the History of Science" (PDF), Lab Talk, 35 (1): 30–31
  3. Spurgin, CB (1987), "Gay-Lussac's gas-expansivity experiments and the traditional mis-teaching of 'Charles's Law'", Annals of Science, 44 (5): 489–505, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00033798700200321
  4. Holbrow, CH; Amato, JC (2011), "What Gay-Lussac didn't tell us", Am. J. Phys., 79, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1119/1.3485034
  5. "The Origins of Gay-Lussac's Law of Combining Volumes of Gases", Annals of Science, 17 (1): 1, 1961, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00033796100202521 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
  6. Gay-Lussac (1809) "Mémoire sur la combinaison des substances gazeuses, les unes avec les autres" (Memoir on the combination of gaseous substances with each other), Mémoires de la Société d'Arcueil 2: 207–234. Available in English at: Le Moyne College.
  7. "Joseph-Louis Gay-Lussac". chemistryexplained.com.
  8. Hartley Harold (1966). "Stanislao Cannizzaro, F.R.S. (1826–1910) and the First International Chemical Conference at Karlsruhe". Notes and Records of the Royal Society of London 21 (1): 56–63. doi:10.1098/rsnr.1966.0006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே_லூசாக்கின்_விதி&oldid=3175360" இலிருந்து மீள்விக்கப்பட்டது