உள்ளடக்கத்துக்குச் செல்

கே2-18பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே2-18பி
K2-18b
செங்குறுமீன் கே2-18 (இடது) ஐச் சுற்றி வரும் 'கே2-18பி' (வலது) பற்றிய ஓவியரின் கைவண்ணம். அவற்றுக்கிடையே கே2-18சி என்ற புறக்கோள் காட்டப்பட்டுள்ளது. கோளின் உண்மையான தோற்றம் தெரியவில்லை.
கண்டுபிடிப்பு
கண்டுபிடிக்கப்பட்ட இடம் கெப்ளர்
கண்டுபிடிப்பு நாள் 2015
கண்டுபிடிப்பு முறை கடப்பு
அரைப்பேரச்சு 0.15910+0.00046
−0.00047
 au
21,380,000 km
மையத்தொலைத்தகவு 0.09+0.12
−0.09
[2]
சுற்றுப்பாதை வேகம் 32.940045±0.000100 d
Argument of periastron 354.3+46.4
−33.8
°[3]
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2.610±0.087 R
நிறை 8.63±1.35 M
அடர்த்தி 2.67+0.52
−0.47
 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்12.43+2.17
−2.07
 m/s2
வெப்பநிலை 265 ± 5 K (−8 ± 5 °C)

கே2-18பி (K2-18b) என்றும் EPIC 201912552 b என்றும் அறியப்படும் விண்பொருள் புவியில் இருந்து 124 ஒளியாண்டுகள் (38 pc) தொலைவில் உள்ள கே2-18 என்னும் செங்குறுமீனின் ஒரு புறக்கோள் ஆகும். இக்கோள், பூமியைப் போல 2.6 மடங்கு பெரிய ஆரம் கொண்ட கோள். இப்புறக்கோள், அதிக வெப்பமும் அதிகக் குளிரும் அல்லாத, நாம் அறிந்த உயிர்கள் வாழக்கூடிய இடைவெப்ப நிலையான பகுதியில் செங்குறுமீனை 33-நாள் சுழற்சியில் வலம் வருகின்றது. ஏறத்தாழ பூமியைப் போன்ற அளவே 'கதிரவ' ஒளியைப் பெறுகின்றது. இதனை கெப்புளர் விண்நோக்கி கண்டுபிடித்துள்ளது. பின்னர் சேம்சு வெபு விண்நோக்கி வழியாக உற்று நோக்கப்பட்டது. இந்தப் புறக்கோளுக்கு வளிமண்டலம் இருப்பதும் தெரிய வந்தது.

2019 இல் இந்தப் புறக்கோளின் வளிமண்டலத்தில் நீர்வளிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அறிவியல் உலகத்திற்கு இப்புறக்கோளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 2023 இல் K2-18b இல் சேம்சு வெபு விண்ணோக்கி கரிம ஈராக்குசைடு வளிமத்தையும் மீத்தேன் வளிமத்தையும் கண்டுபிடித்தது. சேம்சு வெபு விண்ணோக்கியின் தரவிலிருந்து நீர் நிறைந்த கடலும் ஐதரசன் மிகுந்த வளிமண்டலும் கொண்ட குறும் நெப்டியூன் கோள் போன்றது என்ற முடிவுக்கு வந்தனர். உயிரினம் வாழ்வதற்கு உகந்த புறக்கோளாக இருக்கும் வாய்ப்புகளை அலசி வருகின்றார்கள். வெப்பநிலை இடைப்பட்ட நிலையில் இருப்பதையும் தாண்டி வளிநிறை கோள்களாகிய வியாழன் நெப்டியூன் ஆகியவற்றை ஒத்த புறக்கோளாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

2025 இல் K2-18b புறக்கோளின் வளிமண்டலத்தில் இருமீத்தைல் சல்பைடு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளிமம், இயற்கையில் உயிர்வாழும் உயிரிகளில் இருந்து மட்டுமே வெளிவிடப்படுகின்றது என்றும் பூமியில் உள்ளதைவிட 20 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கணக்கிட்டிருக்கின்றனர். இந்த வேதியிய வளிமம் குறைந்த காலமே சிதையாமல் இருக்கும் ஆகையால், இவ்வளிமம் தொடர்ந்து புறக்கோளில் உருவாக்கப்படுகின்றது என்று கருதுகின்றனர்.[4] பிற அறிவியலாளர்கள் இக்கருத்தை விமர்சித்துள்ளனர். உயிரினங்களின்றி இவ்வளிமம் ஆய்வக ஆய்வுகளில் உருவாக்கப்படுவதை சுட்டிக் காட்டுகின்றனர்..[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Benneke et al. 2019, ப. 4.
  2. Blain, Charnay & Bézard 2021, ப. 2.
  3. Martin 2024.
  4. Nikku Madhusudhan; Savvas Constantinou; Måns Holmberg; Subhajit Sarkar; Anjali A. A. Piette; Julianne I. Moses (17 April 2025). "New Constraints on DMS and DMDS in the Atmosphere of K2-18 b from JWST MIRI". The Astrophysical Journal Letters 983 (2). doi:10.3847/2041-8213/adc1c8. https://iopscience.iop.org/article/10.3847/2041-8213/adc1c8. பார்த்த நாள்: 17 April 2025. "The spectrum shows multiple spectral features between ∼6 and 11 μm that are best explained by a combination of DMDS and DMS in the atmosphere". 
  5. Zastrow, Mark (2025-04-17). "K2-18 b could have dimethyl sulfide in its air. But is it a sign of life?". Astronomy Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-17.
  6. Reed, Nathan W.; Shearer, Randall L.; McGlynn, Shawn Erin; Wing, Boswell A.; Tolbert, Margaret A.; Browne, Eleanor C. (October 2024). "Abiotic Production of Dimethyl Sulfide, Carbonyl Sulfide, and Other Organosulfur Gases via Photochemistry: Implications for Biosignatures and Metabolic Potential" (in en). The Astrophysical Journal 973 (2): L38. doi:10.3847/2041-8213/ad74da. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2024ApJ...973L..38R. 

மூலச்சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • K2-18b, NASA Exoplanet Archive
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே2-18பி&oldid=4258175" இலிருந்து மீள்விக்கப்பட்டது