கே. வி .தங்கபாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தங்கபாலு
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 15, 1950 (1950-03-15) (அகவை 66)
சேலம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயந்தி
பிள்ளைகள் 1 மகன்,1மகள்
இருப்பிடம் சென்னை
இணையம் [1]

கே. வி. தங்கபாலு (ஆங்கிலம்: K. V. Thangkabalu) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15,1950ஆம் நாள் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 1 மகன்,1மகள் உள்ளனர்.

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி_.தங்கபாலு&oldid=1922997" இருந்து மீள்விக்கப்பட்டது