கே. வி. ஷைலஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. ஷைலஜா அறியப்பெற்ற மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். மலையாள மொழியில் இருந்து நவீன இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தும் பதிப்பித்தும் வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு கொண்ட இவர் " மலையாளத்தில் எழுதிப் புகழ்பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்க்காமல், அவ்வளவு வெளிச்சத்துக்கு வராத எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்." என்று கூறி உள்ளார்.[1]

சுமித்ரா புதினத்தின் இவரது மொழிபெயர்ப்புத் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு கூறுகிறார்: "கல்பற்றா நாராயணன் தமிழராக இருந்து இந்த நாவலை எழுதி இருந்தால் எத்தகைய மொழியாளுமையைப் பயன்படுத்தி இருப்பார் என உத்தேசிப்போமோ ,மொழி பெயர்ப்பாளராக அதை சாத்தியப்படுத்தும் மாயத்தை , வெற்றிகரமாக செய்திருக்கிறார் , கே .வி .ஷைலஜா."[2]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. முதலாம் வகுப்பு குழந்தையிடம் மலையாளம் கற்றுக் கொண்டேன்!
  2. சுமித்ரா- கடலூர் சீனு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._ஷைலஜா&oldid=3113240" இலிருந்து மீள்விக்கப்பட்டது