கே. வி. மோகன் குமார்
கே. வி. மோகன் குமார் (K. V. Mohan Kumar) என்பவர் கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 10 புதினங்கள், 13 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 37 புத்தகங்களை எழுதியுள்ளார். கேசு, ஆரோ ஓரால் மற்றும் கிளிண்ட் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]மோகன் குமார் ஆலப்புழையில் கே. வேலாயுதன் பிள்ளைக்கும் லட்சுமி குட்டி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1] ஆலப்புழா அரசு எல்பி பள்ளி, சேர்தலா தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் அர்த்திங்கல் செயிண்ட் பிரான்சிஸ் அசிசி உயர்நிலைப் பள்ளியில் முன் பட்டப்படிப்பைப் பயின்றார். சேர்தலா செயின்ட் மைக்கேல் கல்லூரி, கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளாதாரம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை (அரசியல் அறிவியல்), மும்பை ராஜேந்திர பிரசாத் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனத்தில் டி.ஜே: (பத்திரிகையில் முதுகலை பட்டையப் படிப்பு) புது தில்லி இக்னோவில் எம்பிஏ: (வணிக நிர்வாகத்தில் முதுகலை) ஆகிய கல்லூரிகளில் பட்டப் படிப்பைப் பயின்றார்.[2]
தொழில்
[தொகு]மோகன் குமார் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கேரளகௌமுதி, மலையாள மனோரமா ஆகியவற்றில் 12 ஆண்டுகள் செய்தியாளராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1993 இல் மாநில குடிமைப் பணியில் இணைந்தார். இவரது நிர்வாக வாழ்க்கையானது அடூரில் வருவாய் கோட்ட அதிகாரியாகத் தொடங்கியது. இவர் கேரளப் பிரிவில் (2004 ஆண்டு) இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளர்ச்சி ஆணையராகவும், உயர்நிலைக் கல்வி இயக்குநராகவும், பொதுக் கல்வி இயக்குநராகவும், செயலாளர், பொதுக் கல்வி மற்றும் தலைவர், மாநில உணவு ஆணையம் (2018-2023) ஆகியவற்றில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டில், சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற கேசு படத்திற்கு திரைக்கதை எழுதினார். இவரது முதல் புதினமான ஸ்ரதாஷேஹத்தைத் தழுவி ஆரோ ஓரால் என்ற திரைப்படம் எடுக்கபட்டது.
படைப்புகள்
[தொகு]- 10 புதினங்கள்
- ஸ்ரார்த்தஷேஹம்
- ஹே ராமா
- ஜரானும் பூச்சாயும்
- ஏழமிந்திரியம்
- பிராணயாதிந்தே மூன்னம் கண்ணு
- உஷ்ணராஷி
- எடலக்குடி பிராணய ரேகைகள்
- மழூர் தம்பன் ரண்டம் வரவு
- மகாயோகி
- உலா
- 13 சிறுகதைத் தொகுப்புகள்
- அகம் காழ்ச்சகல்
- கினாவல்லயிலே குதிரைகள்
- அலிவேனி எந்து செய்வு
- பூமியுதே அனுபதம்
- ஆசன்னமரனன்
- புழயுதே நிறம் இருள் நீலிமா
- என்டே கிராமகதைகள்
- கரப்புரம் கதகள்
- ரண்டு பசுக்கச்சவடக்கர்
- சம்பூர்ண கதைகள் (1983-2020)
- சௌந்தர்யா பிலாஹரி
- காளியம்ப்
- சிறார் இலக்கியம்
- அப்பூப்பன் மரவும் ஆகாச பூக்களும்
- அம்முவும் மந்திரிகா பெட்டகவும்
- மீனுக்குட்டி கண்ட லோகம்
- உண்டக்கண்ணன்டே காழ்ச்சகல்
- மற்ற படைப்புகள்
- அலிகயிலே கலாபம் (குறும்-புதினம்)
- தேவி நீ பறையருந்து / ஜீவந்தே அவசனதே இல்ல (நினைவுகள்)
- ரொமிலா ஒரு ஓர்மச்சித்திரம் (நினைவுகள்)
- தேவரதி (பயணக்கதை)
- மனஸ் நீ, ஆகாசமும் நீ
- ராமனும் வால்மீகியும் ஞானும்
- அழல் மூடிய கன்னியவணங்கல்
- ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- த தேர்ட் ஐ ஆப் லவ் (புதினம்)
- மேன் ஹன்ட் (புதினம்)
- எண்ட் ஆப் எ ஜர்னி (புதினம்)
- மதார் டவ் & மேஜிக் பாக்ஸ் (சிறார் இலக்கியம்)
விருதுகள்
[தொகு]- 2018: வயலார் விருது — உஷ்ணராசி [3]
- 2018: கேரள சாகித்ய அகாடமி விருது[சான்று தேவை]
- கேரள மாநில பாலசாகித்ய நிறுவன சிறார் இலக்கிய விருது, 2023
- கக்கநாடன் புரஸ்காரம், 2022.
- 2020: கோவிலன் புதின விருது[சான்று தேவை]
- 2019: மகாகவி பி. குஞ்சிராமன் நாயர் புதின விருது[சான்று தேவை]
- 2019: அங்கனம் ஷம்சுதீன் ஸ்ம்ருதி புதின விருது[சான்று தேவை]
- 2017 ஆம் ஆண்டுக்கான ஓ.வி. விஜயன் அறக்கட்டளை இலக்கிய விருது
- ஃபோகானா இலக்கிய விருது
- ஏஐஎம்ஏ அக்ஷர முத்ரா விருது
- பஷீர் விருது
- கே சுரேந்திரன் புதின விருது
- டாக்டர் கே.எம்.தாரகன்' சுவர்ணரேகா 'இலக்கிய விருது
- பிளாவிலா இலக்கிய விருது
- சஹ்ருதய வேதி இலக்கிய விருது
- தோப்பில் ரவி இலக்கிய விருது
- பி.என். பணிக்கர் இலக்கிய விருது
- இலக்கியத்திற்கான காக்கநாடன் விருது (2022)
- 2023 இல் புனேவில் உள்ள சிஞ்சுவாடா மலையாளி சங்கம் (சிஎம்ஏ) நிறுவிய ராஜஹம்சா இலக்கிய விருது.
- 2023 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில குழந்தைகள் இலக்கியத்திற்கான பாலசாகித்ய விருது (புனைகதை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "കെ.വി.മോഹൻകുമാർ [K. V. Mohan Kumar]". Puzha.com. Archived from the original on 28 September 2012. Retrieved 22 February 2019.
- ↑ http://news.keralakaumudi.com/beta/news.php?NewsId=TlRWTTAzMjY2Mzc=&xP=RExZ&xDT=MjAxNi0wNi0yNSAwMDoxMDowMA==&xD=MQ==&cID=Mw== [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vayalar award for K.V. Mohan Kumar's 'Ushnarashi'". The Hindu. 29 September 2018. https://www.thehindu.com/news/national/kerala/vayalar-award-for-kv-mohan-kumars-ushnarashi/article25082396.ece. பார்த்த நாள்: 22 February 2019.