கே. வி. பி. புரம் மண்டலம்
தோற்றம்
குமார வெங்கட பூபால புரம் மண்டலம்
Kumara Venkata Bhupala Puram mandal கே. வி. பி. புரம் மண்டலம் | |
|---|---|
![]() Dynamic map | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | Tirupati |
| வருவாய்க் கோட்டம் | சிறீ காளகசுத்தி |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
கே. வி. பி. புரம் மண்டலம் (K. V. B. Puram mandal) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 34 மண்டலங்களில் ஒன்றாகும். பொதுவாக குமார வெங்கட பூபாலபுரம் மண்டலம் என்று அறியப்படுகிறது. இம்மண்டலம் சிறீகாளகசுத்தி வருவாய் பிரிவின் ஒரு பகுதியாகும். முன்பு சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இம்மண்டலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பதி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.[1][2]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மண்டலத்தின் மொத்த மக்கள் தொகை 42,111 ஆகும். இம்மக்கள் தொகையில் 20,965 ஆண்களும் 21,146 பெண்களும் இருந்தனர். 10875 குடும்பங்கள் இங்கிருந்தன. இம்மண்டலத்தின் சராசரி பாலின விகிதம் 1009 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sasidhar, B. M. (2022-04-04). "Chittoor, Tirupati, Annamayya districts formed as part of rejig". The Hans India (in ஆங்கிலம்). Retrieved 2022-04-06.
- ↑ "Nivar impact: Water touches precarious levels in Chittoor reservoirs" (in en-IN). The Hindu. 2020-11-26. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/nivar-impact-water-touches-precarious-levels-in-chittoor-reservoirs/article33187819.ece.
