கே. வி. திருவேங்கடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. திருவேங்கடம் என்பவர் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மருத்துவர்களில் ஒருவர். மருத்துவத் துறையில் கே.வி. டி. என அழைக்கப்படும் கே.வி.திருவேங்கடம் பொது மருத்துவம், நுரையீரல், ஒவ்வாமை, ஆத்துமா என்னும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லுநர் ஆவார்.

1950 ஆம் ஆண்டில் சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற இவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் 31 ஆண்டுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 25 ஆண்டுகளும் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மரு. பி. சி. ராய் விருது, தன்வந்திரி விருது, பரமாச்சாரிய விருது, சென்னை மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மசிறீ விருது போன்றவைகளை இவர் பெற்றிருக்கிறார். தற்போது ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான அறம் விருதுக்குத் தேர்வு செய்யப் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._திருவேங்கடம்&oldid=2712248" இலிருந்து மீள்விக்கப்பட்டது