கே. வி. எல். பவானி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. வி. எல். பவானி குமாரி
KVL Pavani Kumari
KVL Pavanikumari.jpg
பளூதூக்கும் வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு5 மார்ச் 2003
விசாகப்பட்டினம்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபளூதூக்கும் போட்டி (45 கிலோ)
பயிற்றுவித்ததுபி மணிக்யல் ராவ்

கே. வி. எல். பவானி குமாரி (KVL Pavani Kumari) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பளுதூக்கும் வீராங்கனையாவார். 2003ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ஆம் தேதி இவர் பிறந்தார்.

2020ஆம் ஆண்டு உசுபெகிசுதான் நாட்டின் தாசுகண்டு நகரில் நடைபெற்ற ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்கும் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோத்தப்பள்ளி கிராமத்தில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பவானி பிறந்தார். 2011ஆம் ஆண்டு பவானிக்கு எட்டு வயதாக இருந்தபோது ஐதராபாத் நகரிலுள்ள தெலங்காணா விளையாட்டு அகாடமியில் பயிற்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் டி சீனிவாசன் என்பவர் பயிற்றுவித்தார். பின்னர் பி.மணிக்யல் ராவ் பவானியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று இன்று வரை பயிற்சியினைத் தொடர்ந்து வருகிறார்.[2]

வெற்றிகள்[தொகு]

  1. 2020ஆம் ஆண்டு உசுபெகிசுதான் நாட்டின் தாசுகண்டு நகரில் நடைபெற்ற ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்கும் போட்டிகளில் முறையே 145 கிலோ, 239 கிலோ பளுவைத் தூக்கி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
  2. இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவில் நடைபெற்ற 15வது துணை இளையோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் மொத்தமாக 145 கிலோ பளுவைத் தூக்கி தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]