உள்ளடக்கத்துக்குச் செல்

கே. வி. இராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. இராமன், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் கண்காணிப்பாளராக சென்னை வட்டத்தில் பணிபுரிந்தவர்.[1] இவர் 1966-67 மற்றும் 1972-73களில் அரிக்கமேடு மற்றும் கடல் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் நகரத்தை அகழாய்வுப் பணி செய்வதவர்களில் ஓருவராவர்.[2] கே. வி. இராமன் தொல்லியல் மற்றும் கோவில் கட்டிடக் கலையில் அறிஞராவார். இவர் தொல்லியல் அறிஞர் கே. வி. சௌந்தரராஜனுடன் இணைந்து காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வு அறிக்கையை வெளியிட்டார்.[3]இவர் தொல்லியல் மற்றும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை குறித்தும் பல நூல்கள் வெளியிட்டுள்ளார்.

கே.வி. ராமன் 1934-இல் வழக்கறிஞர் பார்த்தசாரதி அய்யங்காருக்கு 1934-ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தார். பின்னர் 1955-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுநிலை படிப்பு படித்தார். 1960-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் 1961-ஆம் ஆண்டில் இராமன் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் சென்னை வட்டத்தில் தொல்லியல் கண்காணிப்பாளராக பதவியேற்றார்.[4]

படைப்புகள்[தொகு]

கே. வி. இராமன் தொல்லியல் அகழாய்வுகள் பல நூல்கள் எழுதியுள்ளார்.[5]

  • தொல்லியல் ஆய்வுகள்
  • Archaelogy, History and Numismatics of South India
  • Principles and Methods of Archaeology [6]
  • Changing Indian Society
  • Sri Varadarajaswami Temple--Kanchi: A Study of Its History, Art & Architecture
  • Changing Status Of Women In India [7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._இராமன்&oldid=3430686" இலிருந்து மீள்விக்கப்பட்டது