கே. ரங்கராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ரங்கராஜ்
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்,
செயற்பாட்டுக்
காலம்
1983 - 1992

கே.ரங்கராஜ் (K. Rangaraj) இந்திய திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் தீவிரமாக பங்களித்தார்.

தொழில்[தொகு]

ரங்கராஜ் கோவில்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். சென்னையில் வேலை தேடும் போது, கே. பாலசந்தர் இயக்கிய படங்களால் ஈர்க்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சேர முடிவு செய்தார். எம். ஜி. வல்லபன்னுடன் நட்பு ஏற்பட்டு இயக்குனர் பாரதிராஜாவுக்கு அறிமுகமானார். பல்வேறு படங்களில் பாரதிராஜாவுக்கு உதவச் சென்ற ரங்கராஜ் 1983 இல் நெஞ்சமெல்லாம் நீ வெற்றித் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் உன்னை நான் சந்தித்தேன் (1984), உதய கீதம் (1985) கீதாஞ்சலி (1985) மற்றும் பாடு நிலாவே (1987) போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும் தர்மம் வெல்லும் போன்ற அடுத்தடுத்த தோல்விகள் (1989) மற்றும் இவர் தயாரித்த எல்லைச்சாமி (1992) ஆகியவை இவரை நிதி நெருக்கடியில் இட்டுச் சென்றது. மேலும் இவர் படங்களை இயக்குவதை முழுவதுமாக விட்டுவிட்டு சில காலத்திற்கு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார்.[1]

திரைப்படவியல்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

 1. நெஞ்சமெல்லாம் நீயே (1983)
 2. பொண்ணு பிடிச்சிருக்கு (1984)
 3. நிலவு சுடுவதில்லை (1984)
 4. உன்னை நான் சந்தித்தேன் (1984)
 5. உதயகீதம் (1985)
 6. கீதாஞ்சலி (1985)
 7. அமுதகானம் (1985)
 8. உயிரே உனக்காக (1986)
 9. மனிதனின் மறுபக்கம் (1986)
 10. உனக்காகவே வாழ்கிறேன் (1986)
 11. சத்ய ஜோதி (1986; கன்னடம்)
 12. பாடு நிலாவே (1987)
 13. நினைவே ஒரு சங்கீதம் (1987)
 14. கிராமத்து மின்னல் (1987)
 15. தர்மம் வெல்லும் (1989)
 16. சிவரஞ்சனி (1991)
 17. எல்லைச்சாமி (1992)

தொலைக்காட்சி[தொகு]

 1. குடும்பம் (சன் தொலைக்காட்சி)
 2. ஆர்த்தி (ராஜ் தொலைக்காட்சி)
 3. பந்தம் (சன் தொலைக்காட்சி)
 4. மகாலட்சுமி (சன் தொலைக்காட்சி)

மேற்கோள்கள்[தொகு]

 1. Hindu Tamil Thisai (24 April 2018). "Ilayaraja is the reason for Everything! - 'Udhayageetham' Director Rangaraj Interview". YouTube. 3 April 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ரங்கராஜ்&oldid=3440382" இருந்து மீள்விக்கப்பட்டது