கே. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. மாதவன் என்பவர் தமிழக ஓவியராவார். இவர் 1906 -இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். [1] இவரை ஓவிய மன்னர், பேனர் (திரைசீலை) உலகின் தந்தை என்று அழைக்கின்றனர்.

திருவனந்தபுரம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். பிறகு சென்னைக்கு வந்து கன்னையா நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு டி. கே. சண்முகம், என். எஸ். கிருஷ்ணன் போன்றோரின் நாடகங்களுக்கு திரைசீலை வரைந்து கொடுத்தார்.

மங்கம்மா சபதம்,நல்ல தம்பி போன்ற படங்களுக்கு கலை இயக்குனராகப் பணியாற்றினார். இவருக்கு ஓவிய மன்னர் என முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை பட்டம் தந்தார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஓவியருக்கு ரசிகர் நற்பணி சங்கம் தினமணி 01 அக்டோபர் 2017

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மாதவன்&oldid=2641477" இருந்து மீள்விக்கப்பட்டது