உள்ளடக்கத்துக்குச் செல்

கே. மதன் மோகன் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. மதன் மோகன் ராவ்
தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்ஜஜலா சுரேந்தர்
தொகுதிஎல்லாரெட்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1969
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்வார்ட்டன் பள்ளி
தொழில்தொழிலதிபர்

கே. மதன் மோகன் ராவ் (K. Madan Mohan Rao, பிறப்பு: 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள எல்லாரெட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலங்கானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ராவ் ஐதராபாத்திலுள்ள கைரதாபாத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையாரான கே. ராஜேஸ்வர் ராவ் ஓர் ஆசிரியராவார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை 1984-ல் நிசாமாபாத், மோசுராவிலுள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், 1984 முதல் 1986 வரை காமாரெட்டி, ஜிவிஎஸ் இளநிலைக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். 1993-இல் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, 1996-இல் ஐதராபாத்திலுள்ள ஆசார்யா என். ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.[3] பின்னர், 2017-ஆம் ஆண்டில் வார்ட்டன் வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு எல்லாரெட்டி தொகுதியிலிருந்து ராவ் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் 86,989 வாக்குகளைப் பெற்ற இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரத் இராட்டிர சமிதி வேட்பாளரும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜஜலா சுரேந்தரை 24,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Yellareddy assembly election results 2023: Yellareddy Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-07-15.
  2. ↑ "Madan Mohan Rao K Telangana Yellareddy candidate Profile, Candidates Net Worth, Education News". News ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2024-07-15.
  3. ↑ "K. Madan Mohan | the Leaders Page MLA| Yellareddy| INC" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-02. Retrieved 2024-07-15.
  4. ↑ "Madan Mohan Rao. K(Indian National Congress(INC)):Constituency- YELLAREDDY(KAMAREDDY) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2024-07-15.
  5. ↑ "Yellareddy Constituency Election Results 2023: Yellareddy Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-07-15.
  6. ↑ "Madan Mohan Rao K, INC Candidate from Yellareddy Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மதன்_மோகன்_ராவ்&oldid=4617131" இலிருந்து மீள்விக்கப்பட்டது