உள்ளடக்கத்துக்குச் செல்

கே. மணிகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.மணிகண்டன்
தேசியம் இந்தியா
பணிதிரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர், வானொலி தொகுப்பாளர், வசன எழுத்தாளர், பின்னணிக் கலைஞர்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்விக்ரம் வேதா, காலா, ஏலே, விசுவாசம், தம்பி, சில்லுக்கருப்பட்டி

கே.மணிகண்டன் (K. Manikandan) ஓர் இந்திய திரைப்பட எழுத்தாளரும், நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார் .

தொழில்[தொகு]

மணிகண்டன் ஒரு பிரபலமான உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . பின்னர், இவர் ஒரு பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதே நேரத்தில் பல படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பின்னணி பேசி வந்தார்.[1]

இவர் பீட்சா II: வில்லா (2013) என்ற படத்துடன் எழுத்தாளராக அறிமுகமானார்.[2] இந்தியா பாகிஸ்தான் (2015) படத்தில் நடிகராக அறிமுகமான இவர், நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் (2016) படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.[1] எம். எசு. பாசுகர், லல்லு ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் என்ற இயக்குனரின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் (2017) படத்தில் மணிகண்டன் ஒரு வில்லனாக நடித்தார்.[3] புஷ்கர்-காயத்ரியின் மூன்றாவது இயக்கமான விக்ரம் வேதா (2017) படத்திற்கான வசனங்களை எழுதினார். மேலும் இப்படத்தில் ஒரு காவலர் வேடத்திலும் நடித்தார். 2018 இல், பா. ரஞ்சித் தனது காலா (2018) படத்தில் ஒரு வேடத்தை இவருக்கு அளித்தார்.[1][4][5] இவர், இயக்குநர் சிவாவின் விஸ்வாசம், ஜீது ஜோசப் இயக்கிய தம்பி (2019) ஆகிய படத்தில் உரையாடல் எழுத்தாளராக இருந்தார்.[4][6][7] ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி (2019) என்ற காதல் படத்தில் நிவேதிதா சதீஷுடன் இணைந்து நடித்தார்.[8][9] ஏலே (2021) படத்தில் நடித்ததற்காக மணிகண்டன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'நாரை எழுதும் சுயசரிதம்' (ஆங்கில தலைப்பு: Endless) என்ற சுயாதீன திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார்.[10][11] 'இந்திய சினிமா போட்டி'யின் கீழ் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் (2016) பங்கேற்க இது தேர்வு செய்யப்பட்டது.[12][13][14] 16 வது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (2016) திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படங்களில் இதுவும் ஒன்றாகும்.[15][16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Purushothaman, Kirubhakar (2017-08-02). "A versatile talent in demand". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 2018-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 2. Prakash, R. S. (November 15, 2013). "Movie review - Pizza 2: Villa". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 3. Ramanujam, Srinivasa (2017-04-07). "8 Thottakkal: Engaging thriller let down by lengthy sequences" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/8-thottakkal-a-neat-engaging-thriller/article17859130.ece. 
 4. 4.0 4.1 "'Kaala' actor works as a writer for 'Viswasam' - Tamil News". IndiaGlitz.com. 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 5. "Manikandan on Superstar Rajinikanth, Kaala and Vikram Vedha". Behindwoods. 2018-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 6. "Ajith wanted Viswasam to be 'sure-shot entertainer', his performance has an added dimension, says director Siva- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2018-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 7. "Karthi-Jyotika starrer 'Thambi' is based on a documentary". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 8. Rao, Subha J. (2019-01-07). "Halitha Shameem opens up on 'Sillu Karuppatti'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/halitha-shameem-about-sillu-karuppatti/article25930426.ece. 
 9. S, Srivatsan (2019-12-27). "'Sillu Karupatti' movie review: Life is like a box of chocolates" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/reviews/sillu-karupatti-movie-review-life-is-like-a-box-of-chocolates/article30410499.ece. 
 10. Menon, Vishal (2015-07-25). "The odd couple" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/delhi-ganesh-acts-in-narai-ezhuthum-suyasaritham/article7464505.ece. 
 11. Rao, Subha J. (2015-07-11). "Delhi Ganesh on staying with the times" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/delhi-ganesh-interview/article7411227.ece. 
 12. Khajane, Muralidhara (2016-02-03). "Festivals groom future filmmakers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/festivals-groom-future-filmmakers/article8184899.ece. 
 13. "'Thithi' To Open The Bangalore International Film Festival, Announces Films In Competition!". Jamuura Blog. 2016-01-07. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 14. "Meenakshi Shedde: How movies start". mid-day (in ஆங்கிலம்). 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 15. "Tamil Films @ NYIFF 2016. book your tickets immediately! one week to Opening Night!". www.iaac.us. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 16. "NYIFF 2016". www.iaac.us. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
 17. "Umesh Kulkarni's 'Highway' Bags 'Best Film' & 'Best Director' Awards At NYIFF 2016!". Jamuura Blog. 2016-05-18. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மணிகண்டன்&oldid=3551322" இலிருந்து மீள்விக்கப்பட்டது