கே. பொன்முடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கே. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.

எடையார் கிராமத்தில் 19 ஆகஸ்டு 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பொன்முடி&oldid=1775570" இருந்து மீள்விக்கப்பட்டது