கே. பி. ஸ்ரீதேவி
கே. பி. ஸ்ரீதேவி | |
---|---|
![]() | |
பிறப்பு | வாணியம்பலம், மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 மே 1940
இறப்பு | 16 சனவரி 2024 திருப்பூணித்துறை, கேரளம், இந்தியா | (அகவை 83)
தொழில் | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ஒட்டுமொத்த படைப்புக்களுக்காக கேரள சாகித்ய அகாடமி விருது கேரள மாநிலத் திரைப்பட விருது |
துணைவர் | பிரம்மதத்தன் நம்பூதிரிபாடு |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | நாராயணன் பட்டத்திபாடு கௌரி அந்தர்ஜனம் |
கே. பி. ஸ்ரீதேவி (K. B. Sreedevi, 1 மே 1940-16 ஜனவரி 2024) மலையாளத்தில் குழந்தைகள் இலக்கியத்தை எழுதிய எழுத்தாளர் ஆவார். இவரது பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது மற்றும் கதைகளுக்கான கேரள மாநிலத் திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது பேத்தி ரஞ்சனா கே. இவரது யக்னம் என்ற புதினத்தை அதே தலைப்பில் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக உருவாக்கினார்.[1] ஷில்பே-ரூபினி என்ற இவரது கதையை கீதா கிருஷ்ணன்குட்டி வுமன் ஆப் ஸ்டோன் (1990) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[2] இவரது நிறமாலா என்ற புத்தகம் படமாக எடுக்கப்பட்டபோது, அதன் திரைக்கதையையும் இவர் எழுதினார்.
வாழ்க்கை
[தொகு]கே. பி. ஸ்ரீதேவி 1940 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி, இன்றைய மலப்புரம் மாவட்டத்திலுள்ள வாணியம்பலத்தில் வி. எம். சி நாராயணன் பட்டத்திப்பாடு மற்றும் கௌரி அந்தர்ஜனம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[3] இவர் திருப்பூணித்துறை பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், வரவூர் அரசுப் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.[3][1] ஸ்ரீதேவி இசை மற்றும் சமசுகிருதத்தையும் பயின்றார்.[1] பின்னர் பண்டிதராஜா பி. எஸ். சுப்பராம பட்டரிடம் சமசுகிருதத்தில் உயர்கல்வி பயின்றார்.[3] மூன்றாண்டுகள் நரவத் தேவகியம்மாவிடம் வீணை பயிற்சி செய்தார்.
ஸ்ரீதேவி தனது பதின்மூன்று வயதில் ஒரு பறவையின் மரணம் பற்றிய தனது முதல் கதையை எழுதினார்.[1] எழுத்தச்சன் மாசிகா, ஜெயகேரளம் மற்றும் மாத்ருபூமி போன்ற வெளியீடுகள் மூலம் இவர் பல புதினங்களையும் சிறுகதைகளையும் வெளியிட்டார்.[4]
ஸ்ரீதேவி தனது பதினாறு வயதில் பிரம்மதத்தன் நம்பூதிரிபாடு என்பவரை மணந்தார். 1960 ஆம் ஆண்டு தனது கணவருடன் வசித்து வந்தபோது, ஒரு பெண்கள் குழுவை நிறுவினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். பெண்களை எழுத்தறிவு பெறச் செய்வதற்கான கல்வி வகுப்புகள், பெண்களுக்கான கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பெண்களுக்கு வேலைப் பயிற்சி ஆகியவற்றை இந்தக் குழு ஏற்பாடு செய்தது. இவர் திருச்சூர் நகருக்கு மாறும் வரை அந்தக் குழுவில் தீவிரமாக இருந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். பல வருடங்கள் திருச்சூரில் வசித்து வந்த ஸ்ரீதேவி, பின்னர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்பூணித்துறையில் வசித்து வந்தார்.
கே.பி. ஸ்ரீதேவி 16 ஜனவரி 2024 அன்று தனது 83 வயதில் இறந்தார்.
விருதுகள்
[தொகு]- ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாதமி விருது
- 1975 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருது, கதை, நிறமாலா[5] என்ற நூலுக்காக.
- குங்குமம் விருது 1974, யக்ஞம் நூலுக்காக [1]
- நலபாடன் விருது(2000) (நளபாடன் நாராயண மேனன்- நளபாடன் நினைவு கலாச்சார சங்கம், புன்னயூர்குளம் வழங்கியது) மூன்றாம் தளமுற[5]
- விடி விருது.[6]
- 1982 ஆம் ஆண்டுக்கான அரிமாச் சங்க விருது, கதை, நிறமாலா [7]
- தேவிபிரசாதம் அறக்கட்டளை விருது, 2009
- ஆறு தசாப்தங்களாக இலக்கியத் துறையில் இவர் செய்த விரிவான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஞானப்பனா விருது 2021[8]
- ரெய்க்வா ரிஷி விருது 2014[9]
- அமிர்தகீர்த்தி புரஸ்கார் 2018 [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "മകളെ തൊട്ടാൽ ഭ്രഷ്ടാക്കപ്പെടുന്ന അമ്മയുടെ നോവ് പൊള്ളിച്ചു: രഞ്ജന കെ". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 5 February 2022.
- ↑ "Protest of Woman through Silence in Sreedevi's "Shilpe-rupini"". Literary Horizon 1 (3): 139–144. August 2021. https://literaryhorizon.com/wp-content/uploads/2021/08/Protest-of-Woman-through-Silence-in-Sreedevi%E2%80%9Fs-Shilpe-rupini-by-Dr-C-Arulmugil.pdf. பார்த்த நாள்: 5 February 2022.
- ↑ 3.0 3.1 3.2 admin (10 May 2020). "ശ്രീദേവി കെ.ബി". Keralaliterature.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 5 February 2022.
- ↑ "Amritakeerti Puraskaram for K B Sreedevi and Vattapparambil Gopinatha Pillai". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 6 February 2022. Retrieved 6 February 2022.
- ↑ 5.0 5.1 Menon, Anasuya (13 December 2019). "'This is to tell the world that KB Sreedevi was here'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/at-80-author-k-b-sreedevi-pens-her-20th-book/article30297921.ece.
- ↑ "വി.ടി. പുരസ്കാരം കെ.ബി. ശ്രീദേവിക്ക് സമ്മാനിച്ചു". Mathrubhumi (in மலையாளம்). Archived from the original on 5 February 2022. Retrieved 5 February 2022.
- ↑ "കെ ബി ശ്രീദേവി". M3DB.COM (in ஆங்கிலம்). Retrieved 5 February 2022.
- ↑ ഡെസ്ക്, വെബ് (13 February 2021). "ജ്ഞാനപ്പാന പുരസ്കാരം കെ.ബി. ശ്രീദേവിക്ക് | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). Retrieved 5 February 2022.
- ↑ prabeesh. "രൈക്വഋഷി പുരസ്കാരം മനു മാസ്റ്റർക്ക്". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). Retrieved 5 February 2022.
- ↑ "Award for litterateurs KB Sreedevi and Gopinatha Pillai". The New Indian Express. 24 September 2019. Retrieved 5 February 2022.