உள்ளடக்கத்துக்குச் செல்

கே. பி. விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. விசுவநாதன் (K. P. Viswanathan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் கேரள அரசியலில் இயங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கே. பி. விசுவநாதன் 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி குன்னங்குளத்தில் கல்லையில் பங்கன் மற்றும் பருக்குட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரி மற்றும் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1][2][3]

தொழில்

[தொகு]

விசுவநாதன் இந்திய இளைஞர் காங்கிரசுடன் இணைந்திருந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரசின் திருச்சூர் மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார். 1977, 1980, மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக குன்னங்குளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1987, 1991, 1996, மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில், கொடகராவின் பிரதிநிதியாக கேரள சட்டமன்றத்திற்குத் திரும்பினார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கொடகர தொகுதியையும் இவர் சி. ரவீந்திரநாத்திடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். விசுவநாதன் கேரள அரசாங்கத்தில் இரண்டு முறை வனம் மற்றும் வனவிலங்கு அமைச்சராகப் பணியாற்றினார். 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நான்காவது கருணாகரன் அமைச்சரவையிலும், 2004 முதல் 2005 வரை முதல் உம்மன் சாண்டி அமைச்சரவையிலும் பணியாற்றினார்.[4] 2011 ஆம் ஆண்டு அடைந்த தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, விசுவநாதன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[5]

விசுவநாதன் 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று தனது 83 வயதில் திருச்சூரில் இறந்தார்.[6] மனைவி லலிதா மற்றும் சஞ்சித், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களை கொண்டது இவரது குடும்பமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Veteran Congress leader K P Viswanathan passes away". Onmanorama. 15 December 2023. https://www.onmanorama.com/content/mm/en/kerala/top-news/2023/12/15/veteran-congress-leader-k-p-viswanathan-passes-away.html.
  2. ↑ "Former minister and senior Congress leader KP Viswanathan passes away". Kerala Kaumundi. 15 December 2023. https://www.keralakaumudi.com/en/news/news.php?id=1209289&u=former-minister-and-senior-congress-leader-kp-viswanathan-passes-away.
  3. ↑ "Former Kerala minister and Congress leader K P Viswanathan passes away at 83". The New Indian Express. 15 December 2023. https://www.newindianexpress.com/states/kerala/2023/dec/15/former-kerala-minister-and-congress-leader-k-p-viswanathan-passes-away-at-83-2641799.html.
  4. ↑ "Veteran Kerala Congress leader K P Viswanathan dead". Deccan Herald. 15 December 2023. https://www.deccanherald.com/india/kerala/veteran-kerala-congress-leader-k-p-viswanathan-dead-2812501. Republished as: "Veteran Congress leader K P Viswanathan dies at age of 83 in Kerala". Business Standard. 15 December 2023. https://www.business-standard.com/politics/veteran-congress-leader-k-p-viswanathan-dies-at-age-of-83-in-kerala-123121500354_1.html. and "Veteran Congress Leader K P Viswanathan Dead". News18. 15 December 2023. https://www.news18.com/india/veteran-congress-leader-k-p-viswanathan-dead-8704937.html.
  5. ↑ "Veteran Congress leader KP Viswanathan passes away". Mangalorean. 15 December 202. https://www.mangalorean.com/veteran-congress-leader-kp-viswanathan-passes-away/.
  6. ↑ "K P Viswanathan, Cong leader and former min, dies". Times of India. 15 December 2023. http://timesofindia.indiatimes.com/articleshow/106037632.cms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._விசுவநாதன்&oldid=4409037" இலிருந்து மீள்விக்கப்பட்டது