கே. பி. ராமனுன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.பி. ராமானுன்னி
Kp ramanunni 001.jpg
பிறப்பு1955
பொன்னானி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம், இந்தியா
பணிஎழுத்தாளர்
நிர்வாகி, துஞ்சன் நினைவு டிரஸ்ட் திரூர்
வாழ்க்கைத்
துணை
ராஜி
பிள்ளைகள்ஸ்ரீதேவி

கே.பி. ராமானுன்னி (K. P. Ramanunni) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.[1] இவரது முதல் நாவலான சூஃபி பரஞ்ச கதா (சூஃபி சொன்ன கதை) 1995 ஆம் ஆண்டில் கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றது. மற்றொரு புதினமான தைவதிந்தே புஸ்தகம் (கடவுளின் சொந்த புத்தகம்) 2017 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்திய அகாதமி விருதையும் வென்றது. மேலும் ஜீவிதத்தினே புஸ்தகம் (வாழ்க்கை புத்தகம்) என்ற புதினம் 2011 ஆம் ஆண்டின் வயலர் விருதை வென்றது.[2][3]

வாழ்க்கை[தொகு]

ராமானுன்னி 1955 ஆம் ஆண்டில் தாமோதரன் நாயர் மற்றும் ஜானகி அம்மா ஆகியோருக்குப் பிறந்தார். அவர் பள்ளி கல்வியை பொன்னானியின் ஏ.வி. உயர்நிலைப் பள்ளியில் கற்றார். காலிகட் மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். எஸ்பிஐயில் உதவி மேலாளராக பணியாற்றிய அவர், இலக்கிய பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக தன்னுடைய சேவையிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார். தற்போது அவர் கேரளாவின் திருரில் துஞ்சன் மெமோரியல் அறக்கட்டளையின் நிர்வாகியாக உள்ளார். இவர் காலிகட்டின் பூவாட்டுபர்புவில் வசிக்கிறார்.

இலக்கியப் பணி[தொகு]

ராமனுன்னியின் முதல் புதினமான சூஃபி பரஞ்ச கத (சூஃபி சொன்ன கதை) புகழ்பெற்ற கலைஞர் நம்பூதிரியின் விளக்கப்படங்களுடன் கலகமுடி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. இத் தொடர்கதை 1990 ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புதினம் உறவுகளுக்கிடையிலான மத உணர்வுகளை சித்தரிக்கின்றது. இந்த புதினம் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு உட்பட எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் பிரியானந்தன் இந்த புதினத்தை தழுவி அதே பெயரில் திரைப்படத்தை இயக்கினார். கே.பி. ராமானுன்னி இத் திரைப்படத்திற்கான வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

ராமானுன்னி இரண்டாவது புதினமான சரமா வர்ஷிகம் (மரண ஆண்டுவிழா) எழுதுவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. மேலும் அவரது சமீபத்திய புதினம் தைவதிந்தே புஸ்தகம் (கடவுளின் சொந்த புத்தகம்) என்பதாகும். இந்த புதினத்தின் கதை மறதி நோயினால் பீடிக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவரின் வாழ்க்கையைச் சுற்றி வருகின்றது. நகர்ப்புற பாசாங்குத்தனமும் கிராமப்புற நற்பண்புகளும் இதில் சித்தரிக்கப்படுகின்றன. அவரது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களும் இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன.[4] ஜீவிதின்தே புஸ்தகம் என்ற இவரது படைப்பு மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.[5]

விருதுகள்[தொகு]

கே.பி ராமானுன்னி மலையாள இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் வென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில் திவதிந்தே புஸ்தகத்திற்கு கேந்திரா சாகித்ய அகாதமி விருதை வென்றார். [6]1995 ஆம் ஆண்டில் சூஃபி பரஞ்ச கதா என்ற புதினத்திற்காக கேரள சாகித்திய அகாதமி விருதையும், 1989 ஆம் ஆண்டில் எடசேரி விருதையும் வென்றார்.[7] 2011 ஆம் ஆண்டில் ஜீவிதின்தே புஸ்தகத்திற்கு வயலார் விருதை பெற்றார்.[8] 1999 ஆம் ஆண்டில் இவரது சிறுகதையான ஜாதி சோடிகுகாவிற்கு பத்மராஜன் விருது வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு வி.பி.சிவக்குமார் ஸ்மராகா கெலி விருது, ராஷ்டிரிய சாகித்திக் புராஸ்கர், கதை விருது, அபுதாபி சக்தி விருது, பஹ்ரைன் கேரளைய சமாஜம் விருது, ஏ.பி.காலக்காடு விருது என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ராமனுன்னி&oldid=2877704" இருந்து மீள்விக்கப்பட்டது