கே. பி. ராஜேந்திர பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. ராஜேந்திர பிரசாத் (K. P. Rajendra Prasad) (03 மே 1954 – 14 பெப்ரவரி 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் ஆவார். 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் தமிழக மீன்வளத்துறை அமைச்சராக 2001 மே முதல் 2002 மார்ச்சு வரை பணியாற்றினார்.

இவருக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2020 பெப்ரவாி 14 அன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்!". Archived from the original on 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ராஜேந்திர_பிரசாத்&oldid=3586737" இலிருந்து மீள்விக்கப்பட்டது