கே. பி. பி. சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. பி. பி. சாமி (K. P. P. Samy, சூலை 1, 1962 - பிப்ரவரி 26, 2020) என்பவர் தி.மு.க வைச் சேர்ந்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், திருவொற்றியூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு. க. வில் மீனவரணி மாநில செயலாளராகவும்[1] மற்றும் தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் சென்னையில் 1 சூலை 1962 அன்று பிறத்தார். இவர் பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார்.[2] இவர் 26 பிப்ரவரி 2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பி._சாமி&oldid=2922299" இருந்து மீள்விக்கப்பட்டது