கே. பி. நீலமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. நீலமணி ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் மயிலாப்பூரில் கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார்.[2] இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும்; திருவாளப் புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக வயலின் கற்றுத் தேர்ந்தவர். ஆயினும் இசையைத் தொழிலாகக் கொள்ளாமல் தினமணியில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வந்தார்.[3]

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

 1. புல்லின் இதழ்கள்
 2. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்
 3. தென்னை மரத்தீவினிலே
 4. மயக்கம் தெளிந்தது
 5. ஜேம்ஸ் பாண்ட் சங்கர்
 6. மலருக்கு மது ஊட்டிய வண்டு
 7. பிள்ளையார் சிரித்தார்
 8. காப்டன் குமார்
 9. தந்தை பெரியார்
 10. அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்
 11. ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்
 12. மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

 1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 2. Seshadri, Baskar (2020-12-05). "Senior citizens run small enterprises, taking the pandemic in their stride". The Hindu (ஆங்கிலம்). 2021-03-06 அன்று பார்க்கப்பட்டது.
 3. புல்லின் இதழ்கள். 1985. https://ta.wikisource.org/s/7i82. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._நீலமணி&oldid=3115486" இருந்து மீள்விக்கப்பட்டது