கே. பி. சதீசு சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.பி. சதீசு சந்திரன்
தனிநபர் தகவல்
பிறப்பு 23 நவம்பர் 1957 (1957-11-23) (அகவை 63)
நீலேசுவரம் ,கேரளா
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (இடதுசாரி)
இருப்பிடம் நீலேசுவரம்

கே.பி. சதீசு சந்திரன் (K. P. Satheesh Chandran) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (இடதுசாரி) கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு காசர்கோடு தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டார். கேரள சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராக 1996[1] ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[2] இவர் பொருளாதாரம் மற்றும் வரலாறு பாடங்களில் பட்டம் பெற்றவர். இந்திய மாணவர் சங்கம் வழியாக அரசியலுக்கு வந்தார். சந்திரன் மடப்பள்ளி அரசு கல்லூரின் மாணவர் சங்கத்தின் செயலாளர் , துணை செயலாளராக 1984 ஆம் ஆண்டு முதல், செயலாளராக 1985 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையும், இந்திய சனநாயக வாலிபர் சங்கம் காசர்கோடு மாவட்டக் குழுத் தலைவர், மாநில துணைத் தலைவராகவும் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினராக 1991 ஆண்டு முதல், இந்திய பொதுவுடமைக் கட்சி (இடதுசாரி)காசர்கோடு மாவட்ட உறுப்பினர் மற்றும் செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.

கே. கே. கோவிந்தன் நம்பியார் மற்றும் திருமதி. குஞ்சு லட்சுமிக்கும் பாட்டினாவின் நீலேசுவரம் என்னும் ஊரில் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி பிறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._சதீசு_சந்திரன்&oldid=2730357" இருந்து மீள்விக்கப்பட்டது