கே. பி. உமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே .பி .உம்மெர் என்பார் ஒரு பிரபலமான மலையாள நடிகர் ஆவார் .இவர் பெரும்பாலும் வில்லனாகவும் ,குண சித்திர வேடங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார்

பிறப்பும் ,நாடக வாழ்வும்[தொகு]

கே .பி .உம்மெர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் தெக்கோரம் என்னும் ஊரில் முகமது கோயா என்பாருக்கும் ,பீவிக்கும் 11.10.1930-இல் பிறந்த உம்மர் 29.10.2001 அன்று தனது 71-ஆவது அகவையில் சென்னையில் காலமானார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்குமுன் கே.பி.ஏ.சி.நாடகக் குழுவில் நடித்து வந்தார். 1965-இல் எம்.டி-யுடைய முறைப்பெண்ணு படத்தின் மூலம் அறிமுகமானார்.

திரைப்படங்களில் பங்களிப்புகள்[தொகு]

மலையாளத் திரையுலகில் 1965-1995 காலகட்டத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சிய நடிகர் கே.பி.உம்மர். பெரும்பாலும் நடிகர் பிரேம் நசீரின் படங்களில் அவருக்கு எதிரான கதாபாத்திரங்களில் நடித்தவர். மலையாளத்தில் சுமார் 300 படங்களுக்கு மேல் 30 ஆண்டுகளாய் நடித்தவர் .

சொந்த வாழ்க்கை[தொகு]

உம்மெர் பீச்சாமி என்ற பெண்ணை மணந்தார் . இவருக்கு ரஷீத் ,மொகமது அஸ்ரப் என்கிற இரு மகன்களும் ,மரியம்பி என்ற பெண்ணும் உள்ளனர் .

திரைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._உமர்&oldid=2717269" இலிருந்து மீள்விக்கப்பட்டது