கே. பி. உதயபானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. உதயபானு
இயற்பெயர்பானுபிரகாசு
பிறப்பு(1936-06-06)6 சூன் 1936
தரூர், பாலக்காடு மாவட்டம்,
கேரளம், இந்தியா
இறப்பு5 சனவரி 2014(2014-01-05) (அகவை 77)
திருவனந்தபுரம்,
கேரளம், இந்தியா
தொழில்(கள்)பின்னணி பாடகர், இசை அமைப்பாளர்
இசைத்துறையில்1958–2010

கே. பி. உதயபானு (K. P. Udayabhanu) (பானுபிரகாசு என்ற இயற்பெயருடன் பிறந்தார்) (பிறப்பு: 1936 சூன் 6 - இறப்பு: 2014 சனவரி 5) இவர் ஒர் இந்திய பின்னணி பாடகரும், மலையாளத்திரைப்படங்களில் இசை இயக்குனருமாவார். 2009 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த கௌரவமான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தற்போதைய பாலக்காடு மாவட்டத்தில் தாரூரில் என். எஸ். வர்மா மற்றும் அம்மு நேத்தியரம்மா ஆகியோருக்கு உதயபானு பிறந்தார்.[2] இவர் இசை அறிஞர் கே. பி. அப்புக்குட்ட மேனன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் கே. பி. கேசவ மேனனின் மருமகன் ஆவார்.[3] உதயபனு தனது குழந்தைப் பருவத்தை சிங்கப்பூரில் கழித்தார். அங்கு இவரது தந்தை ஒரு தொழில் நடத்தி வந்தார். தனது தாயின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் தனது ஏழு வயதில் இந்தியா திரும்பினார். உதயபானு கல்பாத்தியில் உள்ள தியாகராஜ சங்கீத வித்யாலயாவில் சேர்ந்தார். ஈரோடு விசுவநாத ஐயர், பாலக்காடு மணி ஐயர், எம். டி. இராமநாதன், பால்காடு சிறீராம பாகவதர், மற்றும் புல்லாங்குழல் கிருட்டிண ஐயர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இசை கற்கத் தொடங்கினார். உதயபானு 1970 இல் பாடகர் விஜயலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இராஜீவ் உதயபானு என்ற மகன் பிறந்தார்.[1] விஜயலட்சுமி 2007 இல் இறந்தார்.[4]

பணிகள்[தொகு]

உதயபானு 1956 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இவர் 38 ஆண்டுகள் பணியாற்றினார். 1964-65 ஆம் ஆண்டில், இவர் இலவ்டேல், லாரன்ஸ் பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் 1965 ஆம் ஆண்டில் அதை விட்டுவிட்டு, அதே ஆண்டில் அகில இந்திய வானொலியில் மீண்டும் சேர்ந்தார்.[5] கே.கருணாகரனுடன் இரண்டு முறை மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார்.[1]

இவருக்கு பிடித்த பாடகர்களாக கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா ஆகியோர் இருந்தனர்.[5] எம். பாலமுரளிகிருட்டிணா இவருக்கு பிடித்த கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். படே குலாம் அலி கான் மற்றும் பீம்சென் ஜோஷி இவருக்கு பிடித்த இந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் ஆவர்.

இறப்பு[தொகு]

உதயபானு 2014 5 சனவரி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். முன்னதாக, இவர் பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மகன், மருமகள் மற்றும் பேரனாகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி 2007 இல் இவருக்கு முன்னரே காலமானர். பிரபல இளம் நடிகையும் பாடகருமான அபர்ணா பாலமுரளி, இவரது பேத்தியாவார். இவர் ஒரு தொழில்முறை இசைக்கலைஞராக இருக்கிறார்.

தொழில்[தொகு]

உதயபானு தனது முதல் திரைப்பட பாடலான எனினித்ரா பஞ்சசரா என்பதை நாயுரு பிடிச்சா புலிவாலு படத்திற்காக 1958 இல் பதிவு செய்தார்.[4] இவரது தொழில் வாழ்க்கையில் 50 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[2] இவரது கடைசி பாடல் 2010 ஆம் ஆண்டு தாந்தோன்னி படத்திற்காக பதிவு செய்யப்பட்ட காத்து பரஞ்சதம் என்பதாகும். இவர் கடைசியாக பதிவுசெய்த திரைப்படப் பாடலில் இருந்து 40 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பாடலைப் பாடினார். சமசுயா, வெளிச்சமில்லாத வீதி, மற்றும் மயில்பீலி போன்றப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[5]

இசைக்குழு[தொகு]

1984 ஆம் ஆண்டில், உதயபானு ஓல்ட் இஸ் கோல்ட் என்ற இசைக் குழுவைத் தொடங்கினார். இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியது.[1] 1985 இல் சிங்கப்பூரில் நடந்த ஆசிய பசிபிக் பிரபல பாடல் போட்டியில் உதயபானு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1985 ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட டிரம்ஸ் ஆப் இந்தியா என்ற இசை நிகழ்ச்சியின் தலைமை நடத்துனராகவும் இருந்தார். இவர் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட பாரதியத்தின் தலைமை நடத்துநரும் இசையமைப்பாளரும் ஆவார். தில்லி மத்திய உற்பத்தி பிரிவு மற்றும் டெல்லி தூர்தர்ஷன் ஆகியவற்றிலிருந்து அனைத்து இந்திய மொழிகளிலும் குழுக் குழுக்களை நடத்தியுள்ளார்.[6] சுதந்திரத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக புகழ்பெற்ற கேரள கவிஞர்களின் 32 கவிதைகளை இயற்றியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட தேசபக்தி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவைகளில் 80 க்கும் மேற்பட்ட பாடல்கள் மலையாளத்தில் இருந்தது.[5] மீதமுள்ளவை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, சிந்தி, காஷ்மீர், மராத்தி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் இருந்தன.

மலையாள திரைப்பட வரலாற்றாசிரியர் பாலகோபாலின் கூற்றுப்படி, உதயபானுவின் குரல் 1960 கள் மற்றும் 1970 களின் மெலோடிராமாடிக் படங்களில் சோகமான பாடல்களுக்கு மிகவும் பொருத்தமானது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "അന്ത്യമാം രംഗം തീര്‍ന്നു; വെള്ളിനക്ഷത്രം മാഞ്ഞു: കെ. പി. ഉദയഭാനു അന്തരിച്ചു". Mangalam. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014.
  2. 2.0 2.1 "Veteran Malayalam singer K.P Udayabhanu dies". http://www.ndtv.com/article/south/veteran-malayalam-singer-k-p-udayabhanu-dies-467340. பார்த்த நாள்: 6 January 2014. 
  3. "Musician K P Udayabhanu Passes Away" இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107104856/http://www.newindianexpress.com/states/kerala/Musician-K-P-Udayabhanu-Passes-Away/2014/01/06/article1985121.ece. பார்த்த நாள்: 6 January 2014. 
  4. 4.0 4.1 "Udayabhanu passes away". http://timesofindia.indiatimes.com/city/kochi/Udayabhanu-passes-away/articleshow/28455156.cms. பார்த்த நாள்: 6 January 2014. 
  5. 5.0 5.1 5.2 5.3 "എന്റെ പ്രണയം ചുറ്റുമുള്ള എല്ലാ ജീവജാലങ്ങളോടുമാണ്- കെ.പി. ഉദയഭാനു". DC Books. Archived from the original on 6 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  6. "Veteran Malayalam playback singer K P Udayabhanu passes away". http://netindian.in/news/2014/01/05/00027421/veteran-malayalam-playback-singer-k-p-udayabhanu-passes-away. பார்த்த நாள்: 6 January 2014. 
  7. "Renowned Malayalam singer KP Udayabhanu passes away". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/140106/news-current-affairs/article/renowned-malayalam-singer-kp-udayabhanu-passes-away. பார்த்த நாள்: 6 January 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._உதயபானு&oldid=3706922" இலிருந்து மீள்விக்கப்பட்டது