உள்ளடக்கத்துக்குச் செல்

கே. பி. இராமச்சந்திரன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. இராமச்சந்திரன் நாயர்
தொகுதிஆலப்புழா
சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
1 செப்டம்பர் 1983 – 29 மே 1985
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1982[1]–1987
முன்னையவர்பி. கே. வாசுதேவன் நாயர்
பின்னவர்ரோசம்மா புன்னூசு
பதவியில்
1991[2]–1996
முன்னையவர்ரோசம்மா புன்னூசு
பின்னவர்கே. சி. வேணுகோபால்
தொகுதிஆலப்புழா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1922
இறப்பு28 பிப்ரவரி 2004
அரசியல் கட்சிதேசிய ஜனநாயகக் கட்சி

கே. பி. இராமச்சந்திரன் நாயர் (K. P. Ramachandran Nair) தேசிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனராவார். இவர், 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை கேரள அமைசரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.[3][4] இவர் டாக்டர் கே.பி. பணிக்கர் என்பவருக்கு 1 ஜனவரி 1922 இல் பிறந்தார்.[5] இவர் டி.ரத்தினம்மாவை மணந்தார்.[5] 28 பிப்ரவரி 2004 இல் இறந்தார்.[5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இராமச்சந்திரன், "நாயர் சேவை அமைப்பின்" செயல்பாடுகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அதன் பொருளாளராகவும் அதன் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சி மூலம் அரசியலில் நுழைந்த போதிலும், பின்னர் இவர் நாயர் சேவை அமைப்பின் அரசியல் பிரிவான தேசிய ஜனநாயகக் கட்சியை உருவாக்க உதவினார்.

இவர் 1968-79 வரை ஆழப்புழா நகராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.[3] 1982இல் கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. வாசுதேவன் நாயரை 1590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] 1991 கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சோமசேகரனை தோற்கடித்து 746 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7] இரண்டு முறையும் இவர் ஆலப்புழா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். கே. கருணாகரனின் மூன்றாவது அமைச்சகத்தில், இவர் 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[3]

தேர்தல்

[தொகு]
ஆலப்புழா சட்டமன்றத் தொகுதி (1982)
கட்சி வேட்பாளர் வாக்குகள்
தேசிய ஜனநாயக கட்சி கே. பி. ராமச்சந்திரன் நாயர் 35,014
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பி. கே. வாசுதேவன் நாயர் 33,424
சுயேட்சை கேபிஎம் ஷெரீப் 420
சுயேட்சை அக்கோ 213
செல்லாதது 502
ஆலப்புழா சட்டமன்றத் தொகுதி (1991)
கட்சி வேட்பாளர் வாக்குகள்
தேசிய ஜனநாயக கட்சி கே. பி. ராமச்சந்திரன் நாயர் 42,269
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பி. எஸ். சோமசேகரன் 41,519
பாரதிய ஜனதா கட்சி ஆறுமுகம் பிள்ளை 2,513
சுயேட்சை எஸ். சீதிலால் 637
லோக்தள் விஜயன் வேலு 336
சுயேட்சை உஸ்மான் முகமது யூசுப் 201

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.niyamasabha.org/codes/mem_1_7.htm Members of 7th KLA 1982-87
  2. http://www.niyamasabha.org/codes/mem_1_9.htm Members of 9th KLA 1991-96
  3. 3.0 3.1 3.2 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  4. 4.0 4.1 "NDP founder Ramachandran Nair passes away | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 29 February 2004. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  5. 5.0 5.1 5.2 "K.P. Ramachandran Nair". www.stateofkerala.in (in ஆங்கிலம்). Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  6. "Kerala Assembly Election Results 1982: ALLEPPEY- K. P. Ramachandran Nair". www.keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  7. "DETAILED RESULTS OF KERALA LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCIES: ELECTION 1991". Archived from the original on 12 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)