கே. தங்கவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. தங்கவேல்
தனிநபர் தகவல்
பிறப்பு (1951-10-06)6 அக்டோபர் 1951
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 13 செப்டம்பர் 2020(2020-09-13) (அகவை 68)[1]
கோவை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

கே. தங்கவேல் (K. Thangavel, 6 அக்டோபர், 1951[2] - 13 செப்டம்பர், 2020) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த இவர், இந்திய தொழிற்சங்க மையத்தின் முன்னணி ஊழியராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு நடந்த 127 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். அந்தப் போராட்டம் திருப்பூரில் பனியன் தொழில் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி கோரி நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

இறப்பு[தொகு]

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 13 செப்டம்பர், 2020 அன்று அதிகாலை 2.24 மணியளவில் மரணமடைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தங்கவேல்&oldid=3792496" இருந்து மீள்விக்கப்பட்டது