கே. ஜி. அதியோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் கே. ஜி. அதியோதி
சட்டமன்ற உறுப்பினர், கேரளா
தொகுதி கல்பற்றா
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 2, 1927(1927-01-02)
இறப்பு 22 அக்டோபர் 1987(1987-10-22) (அகவை 60)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மாதவிகுட்டி அம்மா

மருத்துவர் கே. ஜி. அதியோதி (K. G. Adiyodi)(2 சனவரி 1927 – 22 அக்டோபர் 1987) என்பவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள அரசின் நிதி, வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.[1] இவர் பெராம்பிரா மற்றும் கல்பற்றாவிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கே. ஜி. அதியோதி, சந்து கிடாவ் மற்றும் மாதவி அம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவர் ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்று பணியாற்றினார். மாதவிக்குட்டி அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.[1]

வகித்தப் பதவிகள்[தொகு]

  • உணவு மற்றும் வனத்துறை அமைச்சர் (25-09-1971 முதல் 15 மே 1972)
  • நிதி அமைச்சர் (16-05-1972 முதல் 25 திசம்பர் 1975)
  • வனம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் (26-02-1975 முதல் 25 மார்ச் 1977)
  • மக்களவை உறுப்பினர் (1984–1987)
  • அகில இந்திய காங்கிரசு குழு உறுப்பினர் AICC
  • தலைவர், கேரள பொது பணி ஆணையம்
  • தலைவர், (செயல்) கேரள மாநில காங்கிரசு குழு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. 23 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._அதியோதி&oldid=3515255" இருந்து மீள்விக்கப்பட்டது