உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சுதர்சனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சுதர்சனம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தமிழ்நாடு அரசு
பதவியில்
2002–2002
முன்னையவர்வளர்மதி ஜெபராஜ்
பின்னவர்பாப்பா சுந்தரம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2005
முன்னையவர்கி. வேணு
பின்னவர்கே. எஸ். விஜயகுமார்
தொகுதிகும்மிடிப்பூண்டி
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு25 சனவரி 2005
தானாகுளம், திருவள்ளூர், தமிழ்நாடு
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்ஜெயம்மாள்
பிள்ளைகள்கே. எஸ். விஜயகுமார் மற்றும்
சதீஷ்குமார்
வாழிடம்தானாகுளம், திருவள்ளூர்
தொழில்விவசாயி

கே. சுதர்சனம் (K. Sudarsanam) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம் தானாகுளம் பகுதியினைச் சேர்ந்தவர். இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1]

இளமையும் குடும்பமும்

[தொகு]

சுதர்சனம், திருவள்ளூர் மாவட்டம், தானாகுளம் பகுதியினைச் சேர்ந்தவர். இவருக்கு ஜெயம்மாள் என்ற மனைவியும், கே. எஸ். விஜயகுமார் மற்றும் சதீஷ்குமார் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.[2] இவரது மகன் விஜயகுமாரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[3]

இறப்பு

[தொகு]

இவர், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2005 ஜனவரி 9ல், தன் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் வீடு புகுந்து சுதர்சனத்தை சுட்டு கொண்டனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கோ. தங்கவேலு, ed. (2002). தாய்நில வரலாறு. அமிழ்தம் பதிப்பகம். p. 283,290.
  2. "AIADMK MLA shot dead near Chennai".Times of India (Jan 9, 2005)
  3. "தொகுதி அலசல்: முதல் தொகுதியில் முடிசூடுபவர் யார்?". தினத்தந்தி (10 மே, 2016)
  4. "2005 AIADMK MLA murder case: Chennai court convicts three Bawaria gang members".The Hindu (November 22, 2025)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சுதர்சனம்&oldid=4431473" இலிருந்து மீள்விக்கப்பட்டது