கே. சி. லேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சி. லேகா
Lekha K.C.
தனிநபர் தகவல்
முழு பெயர்லேகா கொழுமெல் செட்டாதி
தேசியம்இந்தியா
பிறப்பு22 ஏப்ரல் 1981 (1981-04-22) (அகவை 42)
கண்ணூர், கேரளம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தொழில்முறை குத்துச்சண்டை
நாடு  இந்தியா
உலகப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 பெண்கள் உலக தொழில்முறை குத்துச்சண்டை, தில்லி – 75கிகி
ஆசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 காவோசியங்கு நகரம் - 80கிகி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 குவகாத்தி - 80கிகி

கே. சி. லேகா (Lekha K. C) இந்தியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையாவார். தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையான இவர் 75 கிலோ எடை பிரிவில் இந்திய மகளிர் குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக தொழில்முறை குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் லேகா தங்கப்பதக்கம் வென்றார்.[1]

பிறப்பு[தொகு]

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் எம். வி. கோவிந்தன் நம்பியார் மற்றும் கே. சி. ரோகிணி தம்பதியருக்கு மகளாக லேகா பிறந்தார்.[2]

தொழில்[தொகு]

கொல்லம் நகரில் உள்ள விளையாட்டு ஆணைய மையத்தில் லேகா குத்துச்சண்டை பயிற்சி பெற்றார்.[3] இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஆறு முறை தேசிய பெண்கள் குத்துச்சண்டை வெற்றியாளராக போட்டியை வென்றார். 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக உலக வெற்றியாளர் கோப்பையை வென்று நான்கு தங்கப் பதக்கம் வென்றவர்களில் இவரும் ஒருவர். அப்போட்டியில் 75 கிலோ எடை குத்துச்சண்டைப் பிரிவில் லேகா தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் கோப்பை போட்டியில் தங்கத்தையும்[4] 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் கோப்பைக்கான போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் லேகா வென்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Has Kerala sounded time on KC Lekha?". The Times of India.
  2. "IBF Registered Boxer's Details". Haryana State Boxing Association. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  3. "Lekha in fine nick". தி இந்து. 12 July 2007. http://www.thehindu.com/todays-paper/tp-sports/lekha-in-fine-nick/article1871488.ece. 
  4. "Women's Asian Championships - Kaohsiung, Chinese Taipei - August 5-12 2005".
  5. Kowli, Jay; Paralkar, Prajakta. "Asian Womens Championships - Guwahati, India - September 23-28 2008".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._லேகா&oldid=3315297" இலிருந்து மீள்விக்கப்பட்டது