உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சிவலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சிவலிங்கம்
K. Sivalingam
சிலாங்கூர் மாநில அமைச்சர்
பதவியில்
1997  4 ஏப்ரல் 2007
ஆட்சியாளர்சுல்தான் சலாவுதீன்
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்
ஈஜோக் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
25 ஏப்ரல் 1995  4 ஏப்ரல் 2007
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்பார்த்திபன் கருப்பையா
(பாரிசான்மஇகா)
பெரும்பான்மை6,797 (1995)
3,166 (1999)
1,649 (2004)
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்
செரி சகாயா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
21 அக்டோபர் 1990  25 ஏப்ரல் 1995
முன்னையவர்எம். மகாலிங்கம்
(பாரிசான்மஇகா)
பின்னவர்தொகுதி சீரமைப்பு
பெரும்பான்மை1,317 (1990)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Sivalingam s/o Arumugam Karuppiah

சனவரி 1948
சிலாங்கூர், மலேசியா
இறப்பு4 ஏப்ரல் 2007 (வயது 59)
சென்னை, இந்தியா
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி மஇகா (MIC)
பிற அரசியல்
தொடர்புகள்
(பாரிசான்மஇகா)
பணிஅரசியல்வாதி, பத்திரிகையாளர்

டத்தோ கே. சிவலிங்கம் அல்லது சிவலிங்கம் ஆறுமுகம் கருப்பையா (ஆங்கிலம்; மலாய்: K. Sivalingam அல்லது Sivalingam Arumugam Karuppiah) (சனவரி 1948 - ஏப்ரல் 4, 2007) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 1997 முதல் 4 ஏப்ரல் 2007 வரை சிலாங்கூர் மாநில அமைச்சர்; 21 அக்டோபர் 1990 முதல் 25 ஏப்ரல் 1995 வரை செரி சகாயா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்; 25 ஏப்ரல் 1995 முதல் 4 ஏப்ரல் 2007 வரை இரு தவணைகளுக்கு ஈஜோக் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். அத்துடன் சிலாங்கூர் மாநில மஇகா துணைத் தலைவராகவும் சேவையாற்றி உள்ளார். [1]

இவர் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகா கட்சியின் (MIC) உறுப்பினராக இருந்தார். இவருடைய சேவையைப் பாராட்டி டத்தோ மற்றும் சில மலேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இவர், பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருந்தார். 1968-ஆம் ஆண்டு தமது 20 வயதில் மஇகாவில் சேர்ந்தார், 1986-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தால், மலேசிய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1990 மலேசியப் பொதுத் தேர்தலில் செரி சகாயா சட்டமன்றத் தொகுதியில் புதுமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1995 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, ஜனநாயக செயல் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

1997-ஆம் ஆண்டு, அவர் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.[1] 1999 மற்றும் 2004 மலேசியப் பொதுத் தேர்தல்களில் தம்முடைய ஈஜோக் சட்டமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.[1] மலேசியாவில் ஒரு மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பவர் மாநில அமைச்சர் என அழைக்கப் படுகின்றார்.

இறப்பு

[தொகு]

ஏப்ரல் 4, 2007 அன்று, தமது மகள் மற்றும் மருமகனுடன் இந்தியா, தமிழ்நாட்டிற்கு ஓர் ஓய்வுப் பயணத்தை மேற்கொண்ட போது சென்னையில், மாரடைப்பு காரணமாக இறந்தார்.[2] பின்னர் அவருடைய உடல் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வர்ப்பட்டது.[2]

அவருடைய மரணம், 2007 ஈஜோக் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு (2007 Ijok by-election) வழிவகுத்தது.[3][4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்[5][6][7]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
1990 N12 செரி சகாயா சிவலிங்கம் (மஇகா) 5,405 55.75% முகம்து சாகிர் (செமாங்காட்) 4,088 42.17% 10,138 1,317 74.70%
சுகைமி அமனான் (சுயேச்சை) 202 2.08%
1995 N11 ஈஜோக் சிவலிங்கம் (மஇகா) 8,486 76.02% சின்னையா பெரியண்ணன் (ஜசெக) 1,689 15.13% 11,163 6,797 68.56%
1999 சிவலிங்கம் (மஇகா) 6,567 58.57% கிருஷ்ணன் வீரையா (ஜசெக) 3,401 30.33% 11,747 3,166 69.73%
யூசோப் ரகீம் (சுயேச்சை) 1,245 11.10%
2004 சிவலிங்கம் (மஇகா) 5,213 57.35% ரகுமான் மொகராம் (பிகேஆர்) 3,564 39.21% 9,376 1,649 75.59%
சரீப் நாகூர் கனிi (சுயேச்சை) 313 3.44%

விருதுகள்

[தொகு]

சிலாங்கூர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Selangor exco K Sivalingam dies (subscription required)". malaysiakini.com. 2007-04-04. Retrieved 2007-04-05.
  2. 1 2 "Selangor MIC deputy chief Sivalingam dies at 61". The Star Online (in ஆங்கிலம்). Archived from the original on 8 ஜூன் 2011. Retrieved 12 February 2026. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Vijian, P. (4 April 2007). Selangor Exco Member Sivalingam Dies Of Heart Attack In Chennai பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம். Bernama.
  4. "Big turnout cheer for Barisan". The Star. Malaysia. 29 April 2007. Archived from the original on 21 May 2011. Retrieved 30 April 2007.
  5. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE – 14" (in Malay). மலேசிய தேர்தல் ஆணையம். Archived from the original on 13 September 2020. Retrieved 17 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Percentage figures based on total turnout.
  6. "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. Percentage figures based on total turnout.
  7. "Results of N48 Sentosa 2023". China Press. https://live.chinapress.com.my/ge15/2023election/Selangor/SELANGOR-N48.
  8. "Senarai Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1996" (PDF). www.istiadat.gov.my.
  9. "DPMS 1999". awards.selangor.gov.my.
  10. "SSA 1997". awards.selangor.gov.my.
  11. "AMS 1988". awards.selangor.gov.my.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சிவலிங்கம்&oldid=4582640" இலிருந்து மீள்விக்கப்பட்டது