உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சண்முகம், கிரிஜா வைத்தியநாதனின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 29 சூன் 2019 (சனிக் கிழமை) அன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று தலைமைச் செயலராகப் பணியில் சேர்கிறார்.

இவர் 7 சூலை 1960 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான வாழப்பாடியில் பிறந்தவர்.

இவர் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண்மை பட்டப்படிப்பு முடித்து, இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று, 27 ஆகஸ்டு 1985 அன்று தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

இவர் தலைமைச் செயலாளராக பதவி ஏற்றும் முன்னர் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. K. Shanmugam appointed as new Tamil Nadu Chief Secretary
  2. K Shanmugam appointed as Tamil Nadu Chief Secretary
  3. K Shanmugam appointed as Tamil Nadu Chief Secretary