உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சங்கர வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் சங்கர வாரியர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1 சூன் 1952 (1952-06-01) (அகவை 73)
பிறப்பிடம்தில்லங்கேரி, கண்ணூர், கேரளம்
இசை வடிவங்கள்கதகளி
இசைக்கருவி(கள்)மத்தளம்

கலாமண்டலம் சங்கர வாரியர் (Kalamandalam Sankara Warrier) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மத்தள இசைக் கலைஞர் ஆவார். இவர் கதகளி நடன நாடகத்திற்காக மத்தளத்தை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். [1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சங்கர வாரியர், மலபார் பிராந்தியத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தில்லங்கேரி என்ற சிற்றூரில், கிருஷ்ண வாரியர் மற்றும் மாதவி வாரசியர் இணையருக்கு மகனாக 1952 சூன் 1 ஆம் தேதி பிறந்தார். கொச்சிக்கு அருகிலுள்ள ஏலூரில் தன் மனைவி வல்சலா எஸ் வாரியருடன் வசித்து வருகிறார். அங்கு இவர் எப்.ஏ.டி கதகளி பள்ளியில் 18 ஆண்டுகள் மத்தள ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தொழில்

[தொகு]

சங்கர வாரியர் தனது 15 வயதில் கலாமண்டலத்தில் சேர்ந்தார். அங்கு கலாமண்டலம் அப்புக்குட்டி பொதுவாள் மற்றும் கலாமண்டலம் நாராயணன் நம்பீசன் போன்ற ஆசான்களிடம் மத்தளம் வாசிப்பில் பயிற்சி பெற்றார். நான்கு ஆண்டுகள் படிப்புக்குப் பிறகு, வாரியர் கலாமண்டலத்தில் முதல் தர மத்தள ஆசிரியராக சேர்ந்தார். 1981 ஆம் ஆண்டில், எப்.ஏ.சி.டி (திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் வேதியியல் நிறுவனம்) வாரியரை அதன் கதகளி பள்ளியில் மத்தள ஆசிரியராக பணியில் சேர அழைத்தது. வாரியர் அந்தக் கதகளி பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றினார். 2005 இல் ஓய்வு பெற்றார். இவர் பாரம்பரிய குழும பஞ்சவாத்தியத்தில் மத்தள வாத்தியக் கலைஞராகவும் இருந்துள்ளார்.

புத்தகங்கள்

[தொகு]

சங்கர வாரியர் தனது கல்வி நிறுவனத்தின் உதவியுடன் "மத்தளம் என்னும் மங்களவாத்தியம்" என்ற புத்தகத்தை எழுதி 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
வலையொளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர_வாரியர்&oldid=4433157" இலிருந்து மீள்விக்கப்பட்டது