கே. கே. என். குரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கே. என். குரூப்
தரியோட் என்னும் ஆவணப்படத்திற்காக நேர்காணல் அளிக்கும் குரூப், கோழிக்கோடு, (சூலை,2019)
பிறப்பு13 பெப்ரவரி 1939 (1939-02-13) (அகவை 85)
ஆழியூர், கோழிக்கோடு, கேரளா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லிப் பல்கலைக்கழகம் (இளங்கலை),
கோழிக்கோடு பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர் பட்டம்)
பணிவரலாற்றாய்வாளர்
துணைவேந்தர் ,கோழிக்கோடு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • பழசி சமரங்கள் (1981)
  • டெல்லிச்சேரி தொழிற்சாலையின் வரலாறு, 1683-1794. சந்தியா பப்ளிகேஷன்ஸ். 1985)

கே. கே. என். குரூப் (K. K. N. Kurup) (பிறப்பு 1939) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். தென்னிந்தியாவின் மலபார் பகுதிகள் குறித்த வரலாற்று ஆய்வில் இவர் தனித்துவம் மிக்கவர் ஆவார்.

கல்வி மற்றும் பணிவாழ்க்கை[தொகு]

குரூப் தில்லிப் பல்கலைக்கழகம் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டமும் 1976ம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். 1972 ம் ஆண்டு முதல் கோழிக்கோடு பல்கலையில் தனது ஆசிரியப் பணியைத் துவக்கினார். 1983ம் ஆண்டு மங்களூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. 1991ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைத்தலைவராக நியமிக்கபட்டார். 1998ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[1]


இந்த காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இவர் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் பல்கலைக்கழகம் மீண்டும் தன் நல்ல நிலைக்குத் திரும்பியது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததது. புதிய பொறியியல் கல்லூரி அறிமுகம் செய்யப்பட்டது. வயநாடு, வடக்காரா, திரிச்சூர் ஆகிய பகுதிகளில் ‘கிராமங்களுக்கான அறிவு’ என்னும் இவரது இயக்கத்தின் ஒருபகுதியாக பல்கலைக்கழகத்தின் மூன்றாம் நிலை அமைப்புகள் நிறுவப்பட்டன.[2]

2002ல் இவர் துணைவேந்தராக இருந்தபொழுது வடக்கராவில் தொடங்கப்பட்ட மலபார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இவரது புதிய முன்னெடுப்பாகும். அந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு அவரது பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, அதிக நேரத்தை அவர் அங்கு செலவிட்டார்.

அதுகுறித்து விவரிக்கும் குரூப் “ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த தலையீடுகள் மூலம் மக்களைத் தைரியப்படுத்த உழைக்கும் அறிஞர்கள் மற்றும் சாதாரண குடிமக்களின் அமைப்பாக இந்நிறுவனம் செயல்படுகிறது. மலபார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்( MIRD) சமூக அறிவியல் தளத்தில் கருத்தரங்குகள், மற்றும் விவாதங்களை அடிக்கடி நடத்துகிறது. ஒரு சமூக விஞ்ஞானி ஒரு சமூகத்தை கட்டமைக்கும் பொறியாளர் என்றும், பயனுள்ள வாதங்கள் மூலம் அவர் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். MIRD அதற்கான தளத்தை வழங்குகிறது” என்கிறார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

குரூப் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் முதுநிலை ஆய்வாளராக இருந்தார். கேரளப் பகுதிகளில் அக்ரேரிய உறவுமுறைகள், காலனி ஆதிக்கம் மற்றும் நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கினார். தார்வாட் என்னும் இடத்தில் உள்ள தென்னிந்திய வரலாற்று காங்கிரஸின் தலைவராக 1991ம் ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

1993ம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற இந்திய வரலாற்று காங்கிரஸ் அமர்விலும் தலைவராக இருந்தார். கேரள அரசாங்கத்தால் நடத்தப்பெறும் மரபுசார் கல்வி மையத்தின் இயக்குநர் தலைவராக கரூப் உள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

குரூப் கல்வி சார்ந்த பல விருதுகளைப் பெற்றுள்ளார். அபுதாபி சக்தி தியேட்டர்ஸ் வழங்கிய டி.கே.இராமகிருஷ்ணன் விருதினை 2010ம் ஆண்டில் வென்றார்.[3] 1981ம் ஆண்டு மலையாள மொழியில் சமூக அறிவியல் துறையில் சிறந்த ஆய்வுக்காக கே.தாமோதரன் விருதினை வென்றார்.[1] 2019 ஆம் ஆண்டு அன்னஹ்தா தேசிய சிறப்பு விருதினைப் பெற்றார்.

படைப்புகள்[தொகு]

குரூப் ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு ஆய்வு நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.[1] கேரளாவில் தெய்யம் மற்றும் ஹீரோ வழிபாடு. இந்திய வெளியீடுகள். 1973.

கேரள வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்கள். 1976.

  • வில்லியம் லோகன்: மலபார் விவசாய உறவுகளில் ஒரு ஆய்வு. சந்தியா பப்ளிகேஷன்ஸ். 1981.
  • பழசி சமரங்கல். 1981.
  • மாடர்ன் கேரளா: ரிசர்ச் பேப்பர்ஸ் இன் ஹிஸ்டரி. கேரளா பாஷா நிறுவனம். 1982.
  • டெல்லிச்சேரி தொழிற்சாலையின் வரலாறு, 1683-1794. சந்தியா பப்ளிகேஷன்ஸ். 1985.
  • நவீன கேரளா: சமூக மற்றும் விவசாய உறவுகள் பற்றிய ஆய்வுகள். மிட்டல் பப்ளிகேஷன்ஸ். 1988. ISBN 9788170990949.
  • கேரளாவில் விவசாயப் போராட்டம். 1989.
  • இந்தியாவில் விவசாயிகள், தேசியவாதம் மற்றும் சமூக மாற்றம். சுக் பப்ளிகேஷன்ஸ். 1991.
  • இந்தியாவின் கடற்படை மரபுகள்: குன்ஹாலி மரக்கார்களின் பங்கு. வடக்கு புத்தக மையம். 1997. ISBN 9788172110833. (எடிட்டர்)
  • தேசியவாதம், சமூக மாற்றம்: மலையாள இலக்கியத்தின் பங்கு. 1999.
  • குருப், கே.கே.என். (2000). காசர்கோடு தாலுக்கின் சிறப்புக் குறிப்புடன் தென் கனராவில் நில ஏகபோகம் & விவசாய அமைப்பு. ISBN 81-7748-006-5.
  • குருப், கே.கே.என். (2002) [1975]. கண்ணனூர் அலி ராஜாக்கள். ISBN 81-7748-031-6.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Profile of Speakers. Global Movement of Moderates Foundation. பக். 3–7. http://www.gmomf.org/media/1318.pdf. பார்த்த நாள்: 28 November 2013. 
  2. 2.0 2.1 Neelakandan, Greeshma (16 September 2013). "Kurup's best laid plans". New Indian Express. http://newindianexpress.com/education/edex/Kurups-best-laid-plans/2013/09/16/article1782681.ece. பார்த்த நாள்: 28 November 2013. 
  3. "Award for K.K.N. Kurup". The Hindu. 12 June 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/award-for-kkn-kurup/article461374.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._என்._குரூப்&oldid=3655139" இலிருந்து மீள்விக்கப்பட்டது