உள்ளடக்கத்துக்குச் செல்

கே. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கணேசன்
பிறப்புகுப்பன் கணேசன்
பெங்களூர் கருநாடம் இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை எழுத்தாளர்
தயாரிப்பாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993 – தற்போது
அறியப்படுவதுபோர்க்களத்தில் ஒரு பூ
18. 05. 2009

கே. கணேசன் (K. Ganeshan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பணியாற்றி வருகிறார். கணேசன் போர்க்களத்தில் ஒரு பூ, நவபாரதி, நம்ம மகு பி.ஓ.பி ஆகியவற்றின் இயக்குநராக அறியப்படுகிறார். போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படமானது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] ஆகும்.[2][3]

தொழில்

[தொகு]

கே.கணேசன் உதவி இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஆஷா ஜோதி (1993) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதில் முன்னணி வேடத்திலும் நடித்தார். போர்க்களத்தில் ஒரு பூ (2005),[4][5][6] படத்திற்குப் பிறகு கணேசனின் குறிப்பிடத்தக்க படங்களில் 2015 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான (பெண்) பேபி மேவிஷா கர்நாடக அரசு திரைப்பட விருதைப் பெற்ற சவி நிலயா,[7] யுனெஸ்கோ புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பில் திரையிடப்பட்ட நம்ம மகு,[8] ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட 18.05.2009 ஆகியவை அடங்கும்.[9][10]

இளையராஜா இசையமைத்த கணேசனின் புதிய தமிழ்த் திரைப்படமான காதல் செய் கன்னடத்தில் ப்ரீத்சு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[11]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் குறிப்புகள்
1987 சத்தியமையா கன்னடம் இணை தயாரிப்பாளர், உதவி இயக்குநர்
1993 ஆஷா ஜோதி கன்னடம் ஆம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
1998 நானே சத்யா கன்னடம் ஆம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2001 மானவியதே கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2005 நவபாரதி கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2006 புத்தம் புதுசு தமிழ் ஆம் எழுத்தாளர், இயக்குநர்
2007 மன்னின மக்களு கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2008 மிஸ் பாரதி தெலுங்கு ஆம் எழுத்தாளர், இயக்குநர்
2011 யாரே நீ மோகினியா கன்னடம் ஆம் இணை எழுத்தாளர், இயக்குநர்
2015 போர்க்களத்தில் ஒரு பூ தமிழ் ஆம் எழுத்தாளர், இயக்குநர்
2015 சவி நிலயா கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2018 18. 05. 2009 தமிழ் ஆம் எழுத்தாளர், இயக்குநர்
2018 நம்ம மகு கன்னடம் ஆம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர்
2019 சுஜி பாஸ் கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர்
2020 மனிதம் தமிழ் ஆம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2020 கஸ்தூரி 5நே தரகதி (கஸ்தூரி VTH STD) கன்னடம் ஆம் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனநர்
2021 பைரவி கன்னடம் ஆம் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர்
2022 காதல் செய் தமிழ் ஆம் எழுத்தாளர், இயக்குநர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இசைப்பிரியா பற்றிய கதை படத்துக்கு தடை: பின்னணி காரணம்!" (in ta). ஆனந்த விகடன். 12 September 2015. https://cinema.vikatan.com/tamil-cinema/52318-. 
  2. "Director P.Ganesan briefs on Issai Priya's mentality and thought prior to her death". Lankasri News. 30 September 2015. http://www.lankasrinews.com/view.php?224OllaacB5YY44e2SMW3022mmB2dddBBmU300MgAAee4AY55cca2lOO23. 
  3. "Porkalathil Oru Poo denied censor certificate?". தி டெக்கன் குரோனிக்கள். 21 May 2015. https://www.deccanchronicle.com/150520/entertainment-kollywood/article/porkalathil-oru-poo-denied-censor-certificate. 
  4. "No censor certificate for Tamil film on Lankan TV journalist". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 26 May 2015. https://www.hindustantimes.com/world-cinema/no-censor-certificate-for-tamil-film-on-lankan-tv-journalist/story-EZJOMq9NoBbqz3hWZIHwuK.html. 
  5. "போர்க்களத்தில் ஒரு பூ படம் வரவிடாமல் தடுத்தார் எஸ்வி சேகர்!'- இயக்குநர் குற்றச்சாட்டு" (in ta). ஒன்இந்தியா. 12 September 2015. https://tamil.filmibeat.com/news/s-ve-shekar-caused-porkkalathil-oru-poo-ban-036683.html. 
  6. "Porkalathil Oru Poo's release prospects wither with censor heat". 8 October 2016. https://www.thehindu.com/news/cities/chennai/Porkalathil-Oru-Poo%E2%80%99s-release-prospects-wither-with-censor-heat/article15476021.ece. 
  7. "Karnataka State Film Awards, 2015: Full List". Bangalore Mirror. 17 May 2016. https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/karnataka-state-film-awards-2015-full-list/articleshow/52311976.cms. 
  8. "Tamil Director K Ganeshan Receives International Recognition For His Kannada Film". News 18. 22 October 2021. https://www.news18.com/news/movies/tamil-director-k-ganeshan-receives-international-recognition-for-his-kannada-film-4352825.html. 
  9. "Film on Sri Lankan Army's Tamil genocide waging war with censors". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 23 May 2018. https://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/23/film-on-sri-lankan-armys-tamil-genocide-waging-war-with-censors-1818157.html. 
  10. "18.05.2009 - Tamil Cinema Review". மாலை மலர். 18 May 2018. https://cinema.maalaimalar.com/cinema/review/2018/05/18133610/1164017/18052009-Movie-Review.vpf. 
  11. "Ilaiyaraaja: 'ಪ್ರೀತ್ಸು' ಚಿತ್ರಕ್ಕೆ ಸಂಗೀತ ನೀಡಿದ ಇಳಯರಾಜಾ; ಸ್ಯಾಂಡಲ್‌ವುಡ್‌ಗೆ ಮರಳಿದ 'ಮ್ಯೂಸಿಕ್ ಮಾಸ್ಟ್ರೋ'" (in kn). விஜய கர்நாடகா. 7 April 2022. https://vijaykarnataka.com/entertainment/news/ilayaraja-musical-preethsu-kannada-movie-audio-released/articleshow/90703403.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கணேசன்&oldid=4382849" இலிருந்து மீள்விக்கப்பட்டது