கே. எஸ். பகவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.எஸ். பகவான் என்பவர் இந்தியப் பகுத்தறிவாளர், கன்னட எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஒய்வு பெற்ற பேராசிரியர் ஆவார்.[1] இந்துமத புராணங்கள் பற்றியும் இந்திய நாகரீகம் பண்பாடு பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கில நாடக மேதை வில்லியம் சேக்சுபியரின் படைப்புகளான ஜூலியஸ் ஸீஸர் ஹாம்லெட் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

படிப்பும் பணிகளும்[தொகு]

மைசூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் முதுகலைப் பட்டம் பெற்ற கே எஸ் பகவான் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்தார். அக்காலத்தில் எழுத்தாளராகவும் மொழிபெயர்பாளராகவும் ஆனார். 8 ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த ஆதி சங்கராச்சாரியாரின் பிற்போக்குத் தத்துவம் என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார். சாதிய அமைப்பு, பெண்களுக்குக் கல்வி மறுப்பு, ஒடுக்கப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியவற்றின் மீது சங்கராச்சாரியார் கொண்டிருந்த நிலைப்பாடு மற்றும் இந்துக்கள் புத்தர் விகார்களை இடித்த வரலாறு போன்றவற்றை அந்த நூலில் பகவான் எழுதினார்.[1][2] இதன் காரணமாக இந்து மத ஆதரவாளர்கள் இவரைக் கண்டித்தனர். இவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் பல நூல்களை கன்னடத்தில் படைத்தார். வில்லியம் சேக்சுபியரின் ஆங்கில நாடகங்களான மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் ஜூலியஸ் ஸீஸர் ஹாம்லெட் ஒதெல்லோ போன்றவற்றைக் கன்னடத்தில் மொழி ஆக்கம் செய்தார். 2013 ஆம் ஆண்டுக்குரிய கருநாடக சாகித்திய அகாதமி வாணாள் சாதனை விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

விருதுகள்[தொகு]

 • காவ்யானந்த விருது (1982)
 • குவெம்பு பரிசு (1985)
 • ராஜ்யோத்சவ பிரசாஸ்தி (1999)
 • நாட சேதன விருது (2003)
 • கவிஞர் குவெம்பு நூறறாண்டு விருது (2004)
 • கர்நாடக நாடக அகாதமி விருது (2007)
 • குவெம்பு விருது (2011)
 • சூன்ய பிட பிரசாஸ்தி (2011)
 • சாகித்திய கலாரத்ன விருது (2011)
 • கர்நாடக சாகித்திய அகாதமி விருது (2013)
 • லோகாயதா விருது (2014)
 • கர்நாடக கிரந்தி ரத்ன விருது (2015)

[4][5]

மேற்கோள்[தொகு]

 1. 1.0 1.1 Kartik Chandra Dutt (1 January 1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-0873-5. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&pg=PA132. 
 2. Prof K S Bhagwan. "You can attack us but our works will live on: Prof KS Bhagwan". Hindustan Times. பார்த்த நாள் 7 September 2015.
 3. "K.S. Bhagawan, four others chosen for Sahitya Academy award". The Hindu. 20 September 2015. http://www.thehindu.com/news/cities/bangalore/ks-bhagawan-four-others-chosen-for-sahitya-academy-award/article7669546.ece. பார்த்த நாள்: 30 September 2015. 
 4. "Shimoga now gets snazzy auditorium". The Hindu. 14 April 2005. http://www.thehindu.com/2005/04/14/stories/2005041407300300.htm. பார்த்த நாள்: 8 September 2015. 
 5. "ಪ್ರೊ.ಕೆ.ಎಸ್‌.ಭಗವಾನ್‌ಗೆ ‘ಲೋಕಾಯತ’ ಪ್ರಶಸ್ತಿ" (in Kannada). 8 July 2014. http://www.prajavani.net/article/ಪ್ರೊಕೆಎಸ್‌ಭಗವಾನ್‌ಗೆ-‘ಲೋಕಾಯತ’-ಪ್ರಶಸ್ತಿ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._பகவான்&oldid=2718473" இருந்து மீள்விக்கப்பட்டது