கே. எஸ். நிஜார்
கே. எஸ். நிஜார் Karnail Singh Nijhar | |
|---|---|
| பதவியில் 1990–1991 | |
| பின்னவர் | |
| பதவியில் 1989–1990 | |
| பதவியில் 1999–2004 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | 7,152 (1999); 15,460 (2004) |
| பதவியில் 1985–1987 | |
| பதவியில் 1988–1990 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Karnail Singh Nijhar s/o Amar Singh 2 சூலை 1936 பெங்காலான் உலு, பேராக் |
| இறப்பு | 15 சூன் 2021 (அகவை 84) பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் |
| இளைப்பாறுமிடம் | நீலாய், நெகிரி செம்பிலான் |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | மோலினா கவுர் நிஜார் |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் | மலாயா பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | பொருளியல் வல்லுனர், கல்வியாளர் |
| KS Nijhar: Bullock Cart Boy to Political, Corporate Leader] | |
டான் செரி டத்தோ கே. எஸ். நிஜார் எனும் கர்னாயில் சிங் நிஜார் (ஆங்கிலம்; மலாய்: K. S. Nijhar அல்லது Karnail Singh Nijhar a/l Amar Singh; பஞ்சாபி: ਕਰਨੈਲ ਸਿੰਘ ਨੇਜਾਰ) (1936-2021) என்பவர் மலேசிய அரசியல்வாதி, பொருளியல் வல்லுனர், கல்வியாளர்; 1999 முதல் 2004 வரை இரு தவணைகளுக்கு, சுபாங் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார். மலேசியக் கல்வித்துறையில் நன்கு அறியப்பட்ட இவர் மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளார்.
மஇகா (MIC) கட்சியின் தேசிய உதவித் தலைவராகப் பணியாற்றிய இவர்,[1] 1989 முதல் 1991 வரை மலேசிய வணிக தொழில்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலர்; 1985 முதல் 1990 வரை இரு தவணைகளுக்கு மலேசிய மேலவை உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். மஇகா கட்சியின் மூன்று தேசியத் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இவர் நீண்ட காலம் செயல்பட்டார். மலேசியத் தமிழர் இனத்தவர் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சூழலில், இவர் ஒரு சீக்கிய சமூகப் பின்னணியைக் கொண்ட முக்கியத் தலைவராக விளங்கினா.
குறிக்கோள், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம், யார் வேண்டுமானாலும் இடர்களைச் சாதகமாக மாற்ற முடியும் என்பதற்கு கே.எஸ். நிஜார் அவர்கள் ஒரு சிறந்த சான்றாளராக விளங்குகின்றார்.[2]
வாழ்க்கை
[தொகு]பேராக் மாநிலத்தில் உள்ள குரோ மற்றும் கிளியான் இந்தான் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியில் பிறந்த இவர்,[3] பின்னாட்களில் மாட்டு வண்டிப் பையன் (The Bullock Cart Boy) என்று அன்போடு அழைக்கப்பட்டார்.[4] புலம்பெயர்ந்த ஓர் ஏழை சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரினால் கடுமையான வறுமையை எதிர்கொண்டார்.
ஒன்பது வயது வரை எழுதப் படிக்கத் தெரியாமல்; சொந்தமாக காலணிகள் கூட இல்லாமல் வளர்ந்து வாழ்ந்த இவர்;[5] சொந்த முயற்சியில் முன்னேறி மலேசிய அரசியலிலும், மலேசிய கல்வித் துறையிலும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர் என இன்றும் புகழப்படுகிறார்.[2]
ஏழ்மைப் பின்னணி
[தொகு]அவரின் தந்தை அமர் சிங், பஞ்சாப்பில் இருந்து குடிபெயர்ந்து, 1926-இல் குரோ ரகுமான் ஈயச் சுரங்கத்தில் (Rahman Hydraulic Tin Mine) தொழிலாளியாக வேலை செய்தார். அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்து வீட்டில் நிஜார் வளர்ந்தார். தண்ணீருக்காகக் கிணறுகளையும், இலவச உணவிற்காக இந்து கோயில்களையும் சார்ந்திருந்த நிலையும் ஏற்பட்டது.
பினாங்கிலுள்ள புனித சேவியர் கல்வி நிறுவனத்தில் மாணவராக இருந்தபோது, டென்னிசு விளையாட்டுத் திடல்களில் பந்து பொறுக்கும் பையனாக வேலை செய்து பணம் சம்பாதித்தார். இருப்பினும், அவர் பள்ளியில் தொடர்ந்து சிறந்த மாணவராக விளங்கினார். மேலும் 1947 முதல் 1954 வரை தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்.[1]
கல்வி
[தொகு]இலண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பின்னர், மலாயா பல்கலைக்கழகத்தில் தமது முனைவர் (PhD) பட்டத்தைப் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவர் மலாயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், பொருளியல் துறை அறிவுரைஞராகவும் பணியாற்றினார்.
அவர் ஒரு கல்வியாளராக இருந்த காலக்கட்டங்களில், மலேசிய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புகளுக்காக அவரின் உதவியை நாடியது.[5]
குடும்பம்
[தொகு]இவர் மொலினா கவுர் எனும் விரிவுரையாளரை மணந்தார்.[4][6] இந்தத் தம்பதியருக்கு பிரேமிதா கவுர் நிஜார் என்ற மகளும், ரபிந்தர் சிங் நிஜார் என்ற மகனும் உள்ளனர்.[5]
இறப்பு
[தொகு]நிஜார் 15 சூன் 2021 அன்று பக்கவாதத்தால் காலமானார்.[5][7] அவரது இறுதிச் சடங்குகள் பெட்டாலிங் ஜெயா புக்கிட் பந்தாய் புறநகர்ப்பகுதியில் உள்ள அவரின் வீட்டில் நடைபெற்றது. அடுத்த நாள் நீலாய் நினைவு பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1999 | P107 சுபாங் | கே. எஸ். நிஜார் (மஇகா) | 36,137 | 55.49% | ஐரீன் பெர்னாண்டஸ் (பிகேஆர்) | 28,985 | 44.51% | 67,847 | 7,152 | 73.11% | ||
| 2004 | கே. எஸ். நிஜார் (மஇகா) | 32,941 | 65.33% | நசீர் அசிம் (பிகேஆர்) | 17,481 | 34.67% | 52,017 | 15,460 | 75.67% | |||
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]சுயசரிதை
[தொகு]2016 சூன் மாதம், அவர் தன்னுடைய மகள் பிரமீதாவிடம் கூறிய 'மாட்டு வண்டிச் சிறுவன்' என்ற தலைப்பிலான சுயசரிதையை வெளியிட்டார்.[1][4]
- The Bullock Cart Boy (2016) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-415-369-4[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "K.S. Nijhar, one of highest-ranked Punjabi Sikhs in MIC, dies at 85". The Vibes. 16 June 2021. https://www.thevibes.com/articles/news/31250/k.s-nijhar-one-of-highest-ranked-Punjabi-sikhs-in-mic-dies-at-85.
- 1 2 "KS Nijhar is proof that with purpose, perseverance and hard work, anyone can turn adversity into advantage". FMT Media Sdn Bhd. Retrieved 30 May 2026.
- 1 2 Tan Sri Dr K. S. Nijhar (2016), The Bullock Cart Boy, MPH Group Publishing Sdn Bhd, ISBN 9789674154721
- 1 2 3 "Memoir angkat semangat setia kawan" (in ms). Berita Harian. 20 July 2016. https://www.bharian.com.my/bhplus-old/2016/07/175097/memoir-angkat-semangat-setia-kawan.
- 1 2 3 4 "KS Nijhar: 'Bullock cart boy' to political, corporate leader". Free Malaysia Today. 18 June 2021. https://www.freemalaysiatoday.com/category/nation/2021/06/18/ks-nijhar-bullock-cart-boy-to-political-corporate-leader/.
- ↑ "Retired Graduates from Class of '79 Reunited with Their Retired Lecturers After a Space of Almost 40 Years", akmal ahmat, Persatuan Pustakawan Malaysia (PPM)-Librarians Association of Malaysia, 11 May 2017, retrieved 20 June 2021
- ↑ "Former MIC veep KS Nijhar passes away at 85". The Star. 16 June 2021. https://www.thestar.com.my/news/nation/2021/06/16/former-mic-veep-ks-nijhar-passes-away-at-85.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2018.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in Malay). மலேசிய தேர்தல் ஆணையம். Retrieved 4 February 2017.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 3 "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa. Prime Minister's Department (Malaysia). Retrieved 25 October 2018.