கே. எஸ். சுதாகர்
கே. எஸ். சுதாகர் | |
---|---|
பிறப்பு | வீமன்காமம் யாழ்ப்பாணம் |
இருப்பிடம் | மெல்பேர்ண் |
தேசியம் | ஆஸ்திரேலியா |
அறியப்படுவது | ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் |
கே. எஸ். சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது.[1]
இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர்.
நோர்வே தமிழ் சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்பர்ன்), மரத்தடி இணையம், இலண்டன் பூபாள இராகங்கள், ஞானம் சஞ்சிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்.
செ. சுதா, சுருதி, கதிரொளியான் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார்[1]. இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்திரிப்பவை.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்ற இவரின் சிறுகதைத்தொகுப்பு அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது இவர் போட்டிகளில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு. இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.[2].
இவர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராக உள்ளார்.
வெளியிட்ட நூற்கள்
[தொகு]- எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுப்பு)
- சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (சிறுகதைத் தொகுப்பு)