கே. எஸ். எல். சுவாமி
கே. எஸ். எல். சுவாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | Kikkeri Shamanna Lakshminarasimha Swamy 21 பெப்ரவரி 1939 கிகேரி, மைசூர் மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போது மண்டியா மாவட்டம், கருநாடகம், இந்தியா) |
இறப்பு | 20 அக்டோபர் 2015 பெங்களூர்,இந்தியா | (அகவை 76)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | இரவி, இலலிதா ரவி |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணிப் பாடகர் |
அறியப்படுவது | ஜம்போ சவாரி (1989) |
வாழ்க்கைத் துணை | பி. வி. இராதா |
பிள்ளைகள் | 2 |
கிக்கேரி சாமன்னா லட்சுமிநரசிம்ம சுவாமி (Kikkeri Shamanna Lakshminarasimha Swamy) (21 பிப்ரவரி 1939-20 அக்டோபர் 2015) பிரபலமாக கே. எஸ். எல். சுவாமி/லலிதா ரவி/ரவி என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். அக்காலத்தின் பிரபல இயக்குனர்களான ஜி. வி. ஐயர் மற்றும் எம். ஆர். விட்டல் போன்றவர்களுக்கு உதவியாளராக சிறு வயதிலேயே திரையுலகில் நுழைந்தார்.[1] 1966 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான தூகுதீபா படத்தின் மூலம் சுயாதீன திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். காந்திநகரா (1968), பாக்ய ஜோதி (1975), மலாயா மருதா (1986) ஆகியவையும் இவரது வெற்றி பெற்ற படங்களில் அடங்கும். 1989 ஆம் ஆண்டு வெளியான ஜம்போ சவாரி திரைப்படம் 37 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றது.[2]
இயக்குனர் புட்டண்ணா கனகலின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சுவாமி, அவரது மரணத்திற்குப் பிறகு மசனாத ஹூவு (1984) மற்றும் நீண்டகாலம் தாமதமாக 2006இல் வெளியான சாவீர மெட்டிலு என்ற இரண்டு படங்களை முடித்து வெளியிட்டார். [3] திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, சுவாமிக்கு 2013 ஆம் ஆண்டு டாக்டர் பி. சரோஜா தேவி தேசிய விருது வழங்கப்பட்டது. சுவாமி நடிகை பி.வி. ராதாவை மணந்தார்.
சுபமங்களா படத்திற்காக "சூரியங்கு சந்திரங்கு" பாடலையும், நாகரஹோலே படத்திற்காக "இல்லே ஸ்வர்கா இல்லே நரகா" பாடலையும் பாடியதற்காக சுவாமி நன்கு அறியப்பட்ட பாடகராகவும் இருந்தார். சுவாமி சுவாசக் கோளாறு காரணமாக 20 அக்டோபர் 2015 அன்று பெங்களூரில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khajane, Muralidhara (20 October 2015). "Kannada film-maker K.S.L. Swamy passes away". The Hindu. Retrieved 2015-10-20.
- ↑ "37th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Retrieved 6 December 2014.
- ↑ "Noted film-maker KSL Swamy passes away". The Economic Times. 20 October 2015. Retrieved 2015-10-20.
மேலும் படிக்க
[தொகு]- Khajane, Muralidhara. "He leaves behind a path of thought". தி இந்து. Retrieved 30 March 2018.