கே. எஸ். அஸ்வத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். அஸ்வத்
பிறப்புகரகனஹள்ளி சுப்பராய அஸ்வதநாராயணா
(1925-03-25)25 மார்ச்சு 1925
கரகனஹள்ளி, ஹோலெனரசிபுரா, ஹாசன், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு18 சனவரி 2010(2010-01-18) (அகவை 84)
மைசூர், கர்நாடகா, இந்தியா
மற்ற பெயர்கள்சாமையா மேஸ்துரு
வாழ்க்கைத்
துணை
சாரதாம்மா
பிள்ளைகள்4, (சங்கர் அஸ்வத் உட்பட)

கரகனஹள்ளி சுப்பராய அஸ்வதநாராயணா (Karaganahalli Subbaraya Ashwathanarayana) (25 மார்ச் 1925-18 ஜனவரி 2010) கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தனது ஐம்பதாண்டு கால திரை வாழ்க்கையில் 370 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[1] கர்நாடகாவின் பெங்களூர் கெங்கேரி செயற்கைக்கோள் நகரத்தில் "கேஎஸ் அஸ்வத் நினைவு குழந்தைகள் பூங்கா" என்ற பெயரில் நினைவிடம் உள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அஸ்வத், 1925 மார்ச் 25 அன்று பிரித்தானிய இந்தியாவின் மைசூர் இராச்சியத்தில் உள்ள மைசூர் நகரத்தில் கரகனஹள்ளி சுப்பராய அஸ்வதநாராயணராக பிறந்தார்.[2] இவர் தனது ஆரம்பக் கல்வியை மைசூரில் உள்ள தால்வாய் பள்ளியில் முடித்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் ஏழாவது தரத்துடன் மைசூர் மகாராஜா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்ததால் முறையான கல்வி 1942இல் முடிவுக்கு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு உணவு ஆய்வாளராக வேலை கிடைத்தது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர் ஆனார். பத்து ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தார்.

தொழில்[தொகு]

மைசூர், அனைத்திந்திய வானொலி தயாரித்த வானொலி நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கியபோது அஸ்வத்தின் நடிப்பு தொடங்கியது. ஏ. என். மூர்த்தி ராவ், பர்வதவாணி போன்ற பலரின் நாடகங்களில் இவரது நாடக வாழ்க்கை பெரும் பங்கு வகித்தது. நாடகங்களில் இவரைக் கண்ட திரைப்பட இயக்குநர் கே. சுப்பிரமணியம் 1956 இல் தனது "ஸ்த்ரீரத்னா" என்ற படத்தில் நடிக்க ஓர் வாய்ப்பளித்தார் .

1960இல், கித்தூர் சென்னம்மாவில் சரோஜாதேவியுடன் கடவுள் வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில், இவர் "பக்த பிரகலாதா" என்ற படத்தில் நாரதராக நடித்தார். பின்னர் "செவன் வொண்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் " என்ற ஆங்கிலப் படத்திலும் ஒரு பாத்திரத்தைப் பெற்றார். இவர் வண்ணத் திரைப்படத்தில் தோன்றிய முதல் கன்னட நடிகராவார்.

இவரது பல படங்கள் பெரிய வெற்றி பெற்றன. "நாகராகாவு" படத்தில் சாமையா மேஸ்துரு (சாமையா ஆசிரியர்) என்ற குணச்சித்திர வேடத்தில் நடித்தது[3] இன்றும் இரசிகர்களின் நினைவில் இருக்கிறது.[4] இவர் 370 படங்களில் தோன்றியுள்ளார். அதில் 98 படங்களில் நடிகர் ராஜ்குமாருடன் துணை நடிகராக நடித்துள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

  • 1993-94 - கர்நாடக அரசால் டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • கௌரவ முனைவர் பட்டம்: ஐந்து தசாப்தங்களாக கன்னடத் திரையுலகின் சிறந்த பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டில் தும்கூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். தும்கூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நடிகர் இவர்தான். விருதைப் பெறும் போது, தன்னில் உள்ள நடிகரை வெளியே கொண்டுவந்த அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாக அஸ்வத் கூறினார்.[5][6]
  • 3 தேசிய விருதுகளைப் பெற்றவர்.[2]

இறப்பு[தொகு]

அஸ்வத், முள்ளெலும்பிய தளமத்திறக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.[2] 18 ஜனவரி 2010 அன்று மாரடைப்பால் இறந்தார். மைசூரில் உள்ள சாமுண்டி மலை அடிவாரத்தில் தகனம் செய்யப்பட்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Actor Ashwath no more" இம் மூலத்தில் இருந்து 4 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121004222637/http://www.ourkarnataka.com/kannada/movie/actorashwath09.htm. 
  2. 2.0 2.1 2.2 "The quiet gentleman". The Hindu. 21 January 2010 இம் மூலத்தில் இருந்து 8 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140308093211/http://www.thehindu.com/features/cinema/the-quiet-gentleman/article83267.ece. 
  3. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 16 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200916095114/https://metrosaga.com/puttanna-kanagal-movies/. 
  4. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 23 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200923044122/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/nagarahavu/movie-review/65081613.cms. 
  5. http://www.bharatstudent.com/.+"K S Ashwath given doctorate - Sandalwood News & Gossips" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304100812/http://www.bharatstudent.com/cafebharat/view_news-Kannada-News_and_Gossips-5,21137.php. 
  6. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629223547/http://www.mysorehub.com/20120511773/mysore/k.-s.-ashwath-famous-kannada-film-actor.html. 
  7. "Ashwath passes away". Deccan Herald. 18 January 2010 இம் மூலத்தில் இருந்து 21 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100121015548/http://www.deccanherald.com/content/47415/veteran-kannada-actor-k-s.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._அஸ்வத்&oldid=3792702" இருந்து மீள்விக்கப்பட்டது