கே. எம். ரஹ்மத்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. எம். ரஹ்மத்துல்லா (K. Mohamed Rahamatullah - பிறப்பு 02 ஜூன் 1902 இறப்பு 22 டிசம்பர் 1999), அன்றைய சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி. சென்னை மாகாணம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக 3-4-1952 முதல் 2-4-1954 வரை மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

அன்றைய சென்னை மாகாணத்தின் ஆந்திரப் பிரதேசம்,அனந்தபூரில் 02 ஜூன் 1902 இல் ஹூசைன்பீரான் சாகிப்பிற்க்கு மகனாக மகனாக பிறந்தார். உள்ளூர் பள்ளியில் கல்வி பயின்ற இவர் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.

பதவிகள்[தொகு]

  • அனந்தபூர் முனிசிபல் கவுன்சிலராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகவும், இருந்தார்.
  • அனந்தபூர் மாவட்ட கல்வி கவுன்சில் தலைவர்
  • பிரித்தானிய இந்தியாவின் மத்தியச் சட்டமன்றம் உறுப்பினர்.
  • மெட்ராஸ் பல்கலைகழக செனட் உறுப்பினர்.
  • ஆந்திர பல்கலைகழக செனட் உறுப்பினர்.
  • 1952-1954 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[1]

குடும்பம்[தொகு]

ரஹ்மத்துல்லா சாகிப்பிற்க்கு ரஹமத்துன்னிசா பேகம் என்ற மனைவியும், மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகன் கே.எம். சைபுல்லா, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக 1996 - 2002 வரை பணியாற்றினார். [2]

இறப்பு[தொகு]

22 டிசம்பர் 1999 அன்று காலமானார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Members of the rajya Sabha[1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [2]குடும்பம்
  3. [3]இறப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ரஹ்மத்துல்லா&oldid=3288435" இலிருந்து மீள்விக்கப்பட்டது