கே. எம். மேத்யூ
கே. எம். மேத்யூ | |
---|---|
![]() கே. எம். மேத்யூ | |
பிறப்பு | ஆலப்புழா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 2 சனவரி 1917
இறப்பு | 1 ஆகத்து 2010 கோட்டயம், கேரளம், இந்தியா | (அகவை 93)
அறியப்படுவது | மலையாள மனோரமா இதழின் தலைமை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | அன்னம்மா மேத்யூ (தி. 1942; இற. 2003) |
கே.எம். மேத்யூ (K. M. Mathew) (1917 சனவரி 2 - 2010 ஆகத்து 1) இவர் மலையாள மொழி நாளிதழான மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக இருந்தார். [1] [2] [3] [4]
1954 இல் செய்தித்தாளில் நிர்வாக ஆசிரியராகவும் பொது மேலாளராகவும் சேர்ந்த இவர் 1973 இல் தலைமை ஆசிரியராக பதவியேற்றார். இவரது தலைமையில், மலையாள மனோரமா மலையாளம், இந்தி மொழிகளில் வனிதா என்ற பெயரிலும், வாராந்திர ஆங்கில இதழான தி வீக், உழவர் பத்திரிகை கர்சகசிறீ, குழந்தைகள் இதழான பாலராமன், மலையாளத்தில் களிகுடுக்கா, ஆங்கிலத்தில் மேஜிக் பாட், கலைக்களஞ்சிய மனோரமா ஆண்டு புத்தகம் போன்ற பல வெளியீடுகளை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி மொழிகளில் வெளியிட்டது.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
கே.சி.மம்மன் மாப்பிள்ளை, குஞ்சண்டம்மா ஆகியோரின் ஒன்பது குழந்தைகளில் எட்டாவது குழந்தையாக 1917 சனவரி 2 அன்று கோட்டயத்தில் கே.எம். மேத்யூ பிறந்தார். கோட்டயம், எம்.டி.செமினரி பள்ளி, ஆலப்புழாவின் லியோ பன்னிரெண்டாம் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளிலிருந்து பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வரலாற்றைப் படிக்க கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் படம் பெற்றார். இவர் 1942 செப்டம்பர் 7 அன்று கோட்டயத்தில் உள்ள தனது வீட்டில் அன்னம்மா என்பவரை மணந்தார்.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
தொழில்[தொகு]
மேத்யூ 1940 ஆம் ஆண்டில் சிக்மகளூரில் ஒரு தோட்டக்காரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு இவர் தனது சகோதரர் கே.எம். ஜேக்கப் உடன் சேர்ந்து குடும்பத்திற்கு சொந்தமான பத்ரா தோட்டத்தை கவனித்துக்கொண்டார். சிக்மகளூர் தோட்டத்தில் ஏழு ஆண்டுகள் கழித்தார். இந்த காலகட்டத்தில், இவர் மைசூர் ரப்பர் தொழிற்சாலை என்ற பெயரில் பலூன் உற்பத்தி நிலையத்தை தனது தோட்ட வளாகத்தில் திறந்தார். ஆனால் அதனால் ஏற்பட்ட மாசு காரணமாக தொழிற்சாலை விரைவில் மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டன. இவரது தம்பி கே.எம். மம்மன் மாப்பிள்ளையுடன் சேர்ந்து மெட்ராசு இறப்பர் பேக்டரி என்ற நிறுவனத்தை நிறுவினார். 1947 ஆம் ஆண்டில், மேத்யூ நேச முகவர்களைத் தொடங்க மும்பைக்குச் சென்றார்.
மும்பையில் ஏழு ஆண்டுகள் கழித்த பின்னர், மேத்யூ கோட்டயத்திற்கு குடிபெயர்ந்து மலையாள மனோரமாவில் நிர்வாக ஆசிரியராகவும் பொது மேலாளராகவும் 1954 மே 15 இல் சேர்ந்தார். 1973 மார்ச் 14 இல் இவரது மூத்த சகோதரரும், அப்போதைய தலைமை ஆசிரியருமான கே.எம்.செரியன் இறந்ததைத் தொடர்ந்து, மேத்யூ மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக பதவியேற்றார். 2010 ஆகஸ்ட் 1 அன்று தான் இறக்கும் வரை அந்த பதவியிலிருந்தார். உலகின் முன்னணி ஆலோசகர்களின் உதவியுடன் மலையாள மனோரமாவின் நிர்வாகத்தில் மேத்யூ நிபுணத்துவத்தை செலுத்தினார். மேத்யூவின் தலைமையின் கீழ், மலையாள மனோரமா 17 பதிப்புகளாக வளர்ந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டது.
விருதுகள்[தொகு]
1998 இல், மேத்யூவுக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது . [5] தகவல் அறியும் சுதந்திரம் விருது (1991), தேசிய குடிமகன் விருது (1992), ராமகிருட்டிணா ஜெய் தயால் விருது (1995), துர்கா பிரசாத் சவுத்ரி விருது (1996), பிரஸ் அகாடமி விருது (1997) மற்றும் பி.டி. கோயங்கா விருது(1996) போன்ற பல விருதுகள் இவர் பெற்றுள்ளார்..
இவரது முதலாமாண்டு நினைவு நாள் விழாவில், இந்தியா அஞ்சல் துறை ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது. [6]
குடும்பம்[தொகு]
இவரது மனைவி அன்னம்மா மேத்யூ, சமையல் நிபுணர் ஆவார். மேலும் இவர், வனிதாவின் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் திருமதி கே.எம் மேத்யூ என்ற பெயரில் எழுதினார். மேத்யூவின் புத்தகம் ஒன்று அன்னம்மா (தனது மனைவியை அடிப்படையாகக் கொண்டது) [7] என்ற பெயரில் பெங்குயின் நிறுவனம் மலையாளத்திலும் (2004) ஆங்கிலத்திலும் (2005) வெளியிடப்பட்டது.
இவர்களுக்கு மம்மன் மேத்யூ உட்பட நான்கு குழந்தைகள் இருந்தனர்.
சுயசரிதை[தொகு]

இவரது சுயசரிதை எட்டாமத்தே மோதிரம் [8] [9] [10] என்ற பெயரில் (எட்டாவது மோதிரம்) 2008 இல் வெளியிடப்பட்டது.
இறப்பு[தொகு]
வயது தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்ட இவர் 2010 ஆகத்து 1 அன்று தனது 93 வயதில் கோட்டயத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அடுத்த நாள் அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நியூ ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் (புத்தன்பள்ளி, கோட்டயம்) அடக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி அன்னம்மா 2003 இல் இவருக்கு முன்னரே இறந்து போனார்.
குறிப்புகள்[தொகு]
- ↑ President condoles death of K M Mathew. Hindustan Times. 1 August 2010.
- ↑ "President, Manmohan, Sonia, condole death of K. M. Mathew". http://www.thehindu.com/news/national/article546037.ece. பார்த்த நாள்: 1 August 2010.
- ↑ "Doyen of Indian media, K M Mathew passes away". Ndtv.com. http://www.ndtv.com/article/india/doyen-of-indian-media-k-m-mathew-passes-away-41236.
- ↑ "Malayala Manorama Chief Editor K.M. Mathew passes away". 1 August 2010. http://www.thehindu.com/news/states/kerala/article545984.ece. பார்த்த நாள்: 1 August 2010.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "K.M. Mathew an Indian legend, says Manmohan". The Hindu (Chennai, India). 3 August 2011. http://www.thehindu.com/news/national/article2317179.ece.
- ↑ "Annamma". Easternbookcorporation.com இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110710164433/http://www.easternbookcorporation.com/moreinfo.php?txt_searchstring=9795.
- ↑ "Ettamathe Mothiram". Indulekha. 20 February 2008 இம் மூலத்தில் இருந்து 8 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100108035048/http://indulekha.com/malayalambooks/2008/02/ettamathe-mothiram.html.
- ↑ "Ettamathe Mothiram by K. M. Mathew". Indiaplaza.in. http://www.indiaplaza.in/ettamathe-mothiram-k-m-mathew/books/9788126418527.htm.
- ↑ "Ettamathe Mothiram". manoramaonline.com இம் மூலத்தில் இருந்து 18 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100118053258/http://subscribe.manoramaonline.com/cgi-bin/mmemart.dll/presidio/jsp/demand/catalog/mmMoreProductDetails.jsp?channelId=-20703&productOid=3681268&BV_ID=@@@.