கே. எம். பி. ராஜரத்தினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எம். பி. ராஜரத்தினா
அஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின்
நாடாளுமன்ற செயலாளர்
பதவியில்
1956–1956
வெலிமடை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1956
முன்னவர் எம். பி. பம்பரப்பான
பின்வந்தவர் குசுமா ராஜரத்தினா
பதவியில்
1960–1965
முன்னவர் குசுமா ராஜரத்தினா
பின்வந்தவர் பேர்சி சமரவீர
தனிநபர் தகவல்
பிறப்பு (1927-10-22)22 அக்டோபர் 1927
இறப்பு (அகவை 83)
அரசியல் கட்சி தேசிய விடுதலை முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) குசுமா ராஜரத்தினா
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்

கோனார முதியான்சிலாகே பொடியப்புகாமி ராஜரத்தினா (Konara Mudiyanselage Podiappuhamy Rajaratne, 22 அக்டோபர் 1927 – சனவரி 2011) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ராஜரத்தினா 1927 அக்டோபர் 22 இல் பிறந்தார்.[1][கு 1] இவர் கோட்டே ஆனந்த சாத்திராலயாவில் கல்வி பயின்றார். அங்கேயே இவர் தனது பின்னாளைய மனைவி குசுமாவைச் சந்தித்தார்.[2][3] பள்ளிப் படிப்பை முடித்ததும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரலாற்றில் பட்டம் பெற்றார்.[2][3] பட்டப் படிப்பின் பின்னர் ராஜரத்தினா ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[2][3]

ராஜரத்தினா குசுமாவை 1950 ஆகத்து 24 இல் திருமணம் புரிந்தார்.[2][3] இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்[2][3]

அரசியல்[தொகு]

ராஜரத்தினா ஒரு தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியாகவும், தமிழின எதிர்ப்பாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டார்.[4][5][6][7] இவர் எஃப். ஆர். ஜெயசூரியா என்பருடன் இணைந்து சிங்களத்தைத் தனியான ஆட்சி மொழியாக்குவதற்குப் பரப்புரை செய்த சிங்கள மொழி முன்னணி என்ற அமைப்புடன் செயலாற்றி வந்தார்.[8][9][10]

ராஜரத்தினா 1952 நாடாளுமன்றத் தேர்தலில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவதாகத் தெரிவு செய்யப்பட்டுத் தோற்றார்.[11][12] 1956 தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன சார்பில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13] தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இவர் அஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5] புதிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அரசு சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்தத் தீர்மானித்தது. இதனால் தமிழர் வாழும் பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ராஜரத்தினா முக்கிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டார்.[14] ஆரம்பத்தில் இச்சட்ட முன்வரைவில் "நியாயமான தமிழ் மொழிப் பயன்பாடு" குறித்து பண்டாரநாயக்கா தயாரித்த 4 அம்சத் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால் 1957 சூன் 11 அன்று இலங்கைப் பல்கலைக்க்ழக விரிவுரையாளர் எப். ஆர். ஜெயசூரியவுடன் இணைந்து ஜெயரத்தினாவும் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர்.[15][16][17][18][19]

1956 சூன் 5 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் சத்திஆக்கிரகப் போராட்டத்தை நடத்தினர்.[20] ராஜரத்தினாவின் தலைமையிலான சிங்களக் குண்டர்கள் காவல்துறையினரின் முன்னிலையில் போராட்டக்காரர்களைத் தாக்கி, தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. மு. வி. நாகநாதன், வ. ந. நவரத்தினம் ஆகியோரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் போட்டனர்.[5][21][22]

இலங்கைத் தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த பண்டாரநாயக்கா அனுமதிக்காத காரணத்தால், ராஜரத்தினா அரசில் இருந்து விலகினார்.[5]

வெலிமடையில் இடம்பெற்ற 1956 தேர்தல் செல்லுபடியாகாதென 1956 அக்டோபர் 1 இல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து,[12] ராஜரத்தினா நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.[23] அதன் பின்னர் ராஜரத்தினா 1957 இல் தேசிய விடுதலை இயக்கம் (என்.எல்.எஃப்) என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார்.[24][25] 1958 தமிழருக்கு-எதிரான கலவரங்களை அடுத்து இக்கட்சி தடை செய்யப்பட்டது.[26][27] ராஜரத்தினா சிறீ ஜெயவர்தனபுர கோட்டையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[28][29]

ராஜரத்தினா 1960 மார்ச் தேர்தலில் வெலிமடை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[30] 1960 சூலை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[31] 1961 மே 25 இல் நாடாளுமன்ற இருக்கையை இரண்டாம் தடவையாக இழந்தார்.[23] ஆனாலும், 1962 சூன் 28 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[32]

1965 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.[33] தேர்தலின் பின்னர் இவரது என்.எல்.எஃப் கட்சி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது. ஊவா-பரணகமை தொகுதியில் வெற்றி பெற்ற இவரது மனைவி குசுமா நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[34] டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து குசுமா அரசில் விலகினார்.[7][34] ராசரத்தினா பின்னர் மூதவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, மூதவை 1972 இல் கலைக்கப்படும் வரை அப்பதவியில் இருந்தார்.[2][7]

ராஜரத்தினாவும் அவரது மனைவியும் பின்னர் அரசியலில் இருந்து விலகி வழக்கறிஞர்களாகப் பணியாற்றினர்.[2][3] 2001 தேர்தலில் சிகல உறுமய கட்சியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனாலும், அக்கட்சி தேர்தலில் எந்த இருக்கைகளையும் வெல்ல முடியவில்லை.[7][35][36] ராசரத்தினா 2011 சனவரியில் காலமானார்.[2][37]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவுகள்
1952 நாடாளுமன்றம்[11] வெலிமடை 3,327 தெரிவு செய்யப்படவில்லை
1956 நாடாளுமன்றம்[13] வெலிமடை எம்.ஈ.பி 12,336 தெரிவு
1960 மார்ச் நாடாளூமன்றம்[30] வெலிமடை என்.எல்.எஃப் 6,539 தெரிவு
1960 சூலை நாடாளுமன்றம்[31] வெலிமடை என்.எல்.எஃப் 7,557 தெரிவு
1962 இடைத்தேர்தல்[32] வெலிமடை என்.எல்.எஃப் 8,352 தெரிவு
1965 நாடாளுமன்றம்[33] வெலிமடை என்.எல்.எஃப் 7,919 தெரிவு செய்யப்படவில்லை

குறிப்புகள்[தொகு]

 1. இவர் 1928 அக்டோபர் 27 இல் பிறந்ததாக வேறொரு தகவல் தெரிவிக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Past Members: Konara Mudiyanselage Podiappuhamy Rajaratna". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2585. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Marasinghe, Sandasen; Mudalige, Disna (25-06-2011). "Condolence Messages: 'K M P Rajaratne had many positive humane qualities'". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2011/06/25/pol03.asp. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Ratnakara, Sriya (22-07-2007). "A born fighter who stood up for her principles". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/070722/Plus/pls6.html. 
 4. Akurugoda, S. (31-12-2014). "Open and secret pacts". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002931/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116856. 
 5. 5.0 5.1 5.2 5.3 DeVotta, Neil (2004). Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka. Stanford University Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-4924-8. https://books.google.com/books?id=6RSHzj2EU-cC. 
 6. Rajasingham, K. T.. "Chapter 16: 'Honorable wounds of war'". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2001-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011215123938/http://atimes.com/ind-pak/CK24Df05.html. பார்த்த நாள்: 2018-09-22. 
 7. 7.0 7.1 7.2 7.3 "Merry-go-round - Mr. Rajaratne rides again". டெய்லி நியூசு. 24-11-2001. http://archives.dailynews.lk/2001/11/24/pol20.html. 
 8. Abeyesekera, Kirthie (1990). Among my souvenirs: my life as a roving reporter. Lake House. பக். 59. https://books.google.co.uk/books?id=y9wLAAAAIAAJ. 
 9. Kurukularatne, Buddhika (6 மார்ச் 2005). "How Ranjan Wijeratne saved my life". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002145/http://www.island.lk/2005/03/06/features9.html. 
 10. Godage, K. (7 மே 2009). "Dr. Wijeweera’s constructive response to Manohara De Silva". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002404/http://www.island.lk/2009/05/07/features4.html. 
 11. 11.0 11.1 "Result of Parliamentary General Election 1952". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1952.pdf. 
 12. 12.0 12.1 "New Law Reports: K. K. N. M. Punchi Banda, Petitioner, and K. M. P. Rajaratne, Respondent". LawNet. http://www.lawnet.lk/docs/case_law/nlr/common/html/NLR58V150.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
 13. 13.0 13.1 "Result of Parliamentary General Election 1956". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1956.pdf. 
 14. Abeygunawardhana, J. (31-08-2008). "Was SWRD the architect of the Sinhala only legislation of 1956?". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306053458/http://www.nation.lk/2008/08/31/letters.htm. 
 15. Urugodawatte, Savimon (31-07-2007). "Approaching Ethnic Problem as Terrorist is like Catching Cobra by its tail". federalidea.com இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202001938/http://federalidea.com/focus/archives/105. 
 16. Urugodawatta, Savimon (5-09-2009). "Constitutional amendments and Elections Ordinance". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002845/http://www.island.lk/2009/09/05/features5.html. 
 17. Sachi Sri Kantha. "A. Amirthalingam’s Historic Speech in the Sri Lankan Parliament". Ilankai Tamil Sangam. http://www.sangam.org/ANALYSIS/Sachi_8_25_03.htm. 
 18. Jayatilaka, Tissa (14 பிப்ரவரி 2010). "An early voice for integration". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/100214/Plus/plus_22.html. 
 19. DeVotta, Neil (2004). Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka. இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம். பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-4924-8. https://books.google.com/books?id=6RSHzj2EU-cC. 
 20. A. Jeyaratnam Wilson (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: A Political Biography. C. Hurst & Co.. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977. 
 21. டி. பி. எஸ். ஜெயராஜ் (3-10-2006). "Peaceful protests of Tamil Parliamentarians". transcurrents.com இம் மூலத்தில் இருந்து 27-09-2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927205836/http://transcurrents.com/tamiliana/archives/200. 
 22. "5-06-1956". Peace and Conflict Timeline இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150216151836/http://pact.lk/5-june-1956/. 
 23. 23.0 23.1 Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention [sic] of Parliament". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
 24. Kanapathipillai, Valli (2009). Citizenship and Statelessness in Sri Lanka: The Case of the Tamil Estate Workers. Anthem Press. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-791-3. https://books.google.com/books?id=XZgdrEWxpR0C. 
 25. Smith, Donald Eugene (1966). South Asian Politics and Religion. Princeton University Press. பக். 520. https://books.google.com/books?id=dknWCgAAQBAJ. 
 26. A. Jeyaratnam Wilson (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: A Political Biography. C. Hurst & Co.. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977. 
 27. Tarzie Vittachi (1958). Emergency '58 the Story of the Ceylon race Riots. André Deutsch. பக். 55. http://www.noolaham.org/wiki/index.php/Emergency_%2758_the_Story_of_the_Ceylon_race_Riots?uselang=en. 
 28. Tarzie Vittachi (1958). Emergency '58 the Story of the Ceylon race Riots. André Deutsch. பக். 91. http://www.noolaham.org/wiki/index.php/Emergency_%2758_the_Story_of_the_Ceylon_race_Riots?uselang=en. 
 29. Rajasingham, K. T.. "Chapter 17: Assassination of Bandaranaike". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924030940/http://www.atimes.com/ind-pak/Cl01Df05.html. பார்த்த நாள்: 2018-09-22. 
 30. 30.0 30.1 "Result of Parliamentary General Election 1960-03-19". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-03-19.pdf. 
 31. 31.0 31.1 "Result of Parliamentary General Election 1960-07-20". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-07-20.pdf. 
 32. 32.0 32.1 "Summary of By-Elections 1947 to 1988". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-by-elections-1956.pdf. 
 33. 33.0 33.1 "Result of Parliamentary General Election 1965". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1965.pdf. 
 34. 34.0 34.1 D. B. S. Jeyaraj (14-08-2015). "How a Seven Party National Government was Formed Fifty Years Ago". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/article/how-a-seven-party-national-government-was-formed-fifty-years-ago-83593.html. 
 35. "Sihala Urumaya national list nominees". தி ஐலண்டு (இலங்கை). 7 November 2001 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002455/http://www.island.lk/2001/11/07/news09.html. 
 36. "Results of Parliamentary General Election - 2001". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-2001.pdf. 
 37. "In Brief". சண்டே ஒப்சேர்வர். 30 சனவரி 2011. http://archives.sundayobserver.lk/2011/01/30/new50.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._பி._ராஜரத்தினா&oldid=3586721" இருந்து மீள்விக்கப்பட்டது