உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எம். ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எம். ஜார்ஜ்
K. M. George
கேரள அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
26 சூன் 1976 (1976-06-26) – 11 திசம்பர் 1976 (1976-12-11)
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1970 (1970)–1976 (1976)
தொகுதிபூஞ்ஞார்
கேரள அரசில் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்[1]
பதவியில்
1 நவம்பர் 1969 (1969-11-01) – 1 ஆகத்து 1970 (1970-08-01)
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967 (1967)–1970 (1970)
தொகுதிபூஞ்ஞார்
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1960 (1960)–1964 (1964)
தொகுதிமூவாற்றுபுழா
கேரள சட்டமன்றசட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957 (1957)–1959 (1959)
தொகுதிமூவாற்றுபுழா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-01-18)18 சனவரி 1919 [2]
அரக்குழா, மூவாற்றுப்புழை, திருவிதாங்கூர் இராச்சியம்]], பிரித்தானிய இந்தியா
(நவீன எர்ணாகுளம், கேரளம், இந்தியா)
இறப்பு11 திசம்பர் 1976(1976-12-11) (அகவை 57)
மூவாற்றுப்புழை, எர்ணாகுளம், கேரளம், இந்தியா
அரசியல் கட்சிகேரள காங்கிரசு
துணைவர்மார்த்தம்மா
பிள்ளைகள்பிரான்சிசு ஜார்ஜ் உட்பட ஐவர்

கே. எம். ஜார்ஜ் (K. M. George) (18 ஜனவரி 1919-11 டிசம்பர் 1976) கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியா அரசியல் கட்சியான கேரள காங்கிரசின் நிறுவனர் தலைவர்.

கேரள காங்கிரசு கட்சியின் தலைவரும் மற்றும் கே. எம். ஜார்ஜின் மகனுமான பிரான்சிஸ் ஜார்ஜ்.

கே. எம். ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1964இல் பி. டி. சாக்கோ இறந்த பிறகு, கொந்தளிப்பான சூழ்நிலையில், கே. எம். ஜார்ஜ் தலைமையில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டு, சட்டசபையில் ஒரு தனி குழுவாக அமர்ந்து, ஆர். சங்கர் அமைச்சரவையை கவிழ்த்த்னர். பின்னர், கோட்டயத்தில் இவரது தலைமையில் கேரள காங்கிரசு என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கினர்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஜார்ஜ் 1919 ஜனவரி 18 அன்று மூவாற்றுப்புழை என்ற ஊரில் பிறந்தார். மார்த்தம்மா படிஞ்சரேக்கரா என்பவரை மணந்த இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கே. பிரான்சிஸ் ஜார்ஜ், இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு முறை இடுக்கி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஜார்ஜ் 1976 டிசம்பர் 11 அன்று செ. அச்சுத மேனனின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியபோது இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala State Portal".
  2. "Members - Kerala Legislature".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ஜார்ஜ்&oldid=4068619" இலிருந்து மீள்விக்கப்பட்டது