உள்ளடக்கத்துக்குச் செல்

கே. என். சொக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. என். சொக்சி
K. N. Choksy
இலங்கையின் நிதி அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001  06 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்னவர்சரத் அமுனுகம
அரசியலமைப்பு, அரச விவகார அமைச்சர்
பதவியில்
1992  19 ஆகத்து 1994
குடியரசுத் தலைவர்டிங்கிரி பண்டா விஜயதுங்கா
ரணசிங்க பிரேமதாசா
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-02-07)7 பெப்ரவரி 1933
கொழும்பு, பிரித்தானிய இலங்கை
இறப்பு5 பெப்ரவரி 2015(2015-02-05) (அகவை 81)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசிய முன்னணி
துணைவர்பிரெனி கூப்பர்
பிள்ளைகள்ஜம்சீத், குர்சீத், விசுதாஸ்ப்
வாழிடம்23 / 3, பிளவர் வீதி,
கொழும்பு 7, இலங்கை
தொழில்வழக்கறிஞர்

கே. என். சொக்சி (K. N. Choksy) என அழைக்கப்படும் கைர்சாஸ்ப் நாரிமன் சொக்சி (Kairshasp Nariman Choksy, 7 பெப்ரவரி 1933 - 5 பெப்ரவரி 2015)[1] இலங்கை சனாதிபதி வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.[2] 1993 முதல் 1994 வரை அரசுத்தலைவர் டிங்கிரி பண்டா விஜயதுங்காவின் அரசில் அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

சொக்சி இலங்கையின் மிகச் சிறுபான்மை இனங்களில் ஒன்றான பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை வழிப் பாட்டனார் 1880களில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள சூரத்து நகரில் இருந்து இலங்கையில் குடியேறியவராவார். கொழும்பில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சொக்சியின் தந்தை நாரிமன் கே. சொக்சி ஒரு வழக்கறிஞராவார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்ற சொக்சி சட்டக் கல்வி பயின்று 1958 இல் வழக்கறிஞரானார். 1981 இல் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.

அரசியலில்

[தொகு]

1989 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2001 முதல் 2004 நிதி அமைச்சராகவும், 1993 முதல் 1994 வரை அரசியலமைப்பு மற்றும் அரச விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.

குடும்பம்

[தொகு]

சொக்சி மும்பையச் சேர்ந்த ஃபிரெனி கூப்பர் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் ஜம்சீது மத்திய யூரேசியப் படிப்புகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சரத்துத்திர சமய அறிஞருமான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இரண்டாவது மகன் வாசிங்டனில் உள்ள அமெரிக்க வணிகக் கழகத்தின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். மூன்றாவது மகன், விசுதாஸ்ப் கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Choksy passes away [தொடர்பிழந்த இணைப்பு], தி ஐலண்டு, 6 பெப்ரவரி, 2015
  2. Nariman (K.N.) Choksy Asian Affairs

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._சொக்சி&oldid=3366358" இலிருந்து மீள்விக்கப்பட்டது